பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்து மோசமான நிலையில் இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் தென் ஆப்பிரிக்கா அணியை ஊக்கப்படுத்தும் விதமாக அதன் தலைமை பெயர்ச்சியாளர் ராப் வால்டர் சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிற நிலையில் டி20 தொடரில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. எனவே சொந்த மண்ணில் நடைபெறும் ஒரு நாள் தொடரிலும் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெறும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல் போட்டியில் மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, இரண்டாவது ஒருநாள் போட்டியில் 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மேலும் மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் 36 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒரு நாள் தொடரை முழுமையாக கைப்பற்றி இருக்கிறது. தென்னாபிரிக்க அணி சொந்த மண்ணில் முழுமையாக தொடரை இழப்பது இதுவே முதல் முறையாகும். இந்த சூழ்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இன்னும் சில மாதங்களில் பாகிஸ்தானில் நடைபெற உள்ள நிலையில் பாகிஸ்தான் அணியிடமே சொந்த மண்ணில் தோற்று இருப்பது அந்த அணிக்கு எதிர்மறையான விமர்சனங்களை உண்டாக்கி இருக்கிறது. இந்த நிலையில் தென்னாப்பிரிக்க தலைமை பயிற்சியாளர் ராப் வால்டர் சில முக்கிய கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்.
வீரர்களின் தரத்தில் நம்பிக்கை வைக்க வேண்டும்
இதுகுறித்து அவர் விரிவாகக் கூறும்போது “எங்களது அணி உலக கோப்பை மற்றும் முக்கியமான தொடர்கள் வரும்போது சரியான நேரத்தில் பிரகாசிக்கும் என்று நன்றாகத் தெரியும். எங்கள் தோழர்கள் முன்னேற நினைக்கிறார்கள். அவர்கள் சிறந்த கிரிக்கெட்டை வெளியே கொண்டு வர முயற்சி செய்கிறார்கள். இதனை தொடர்ச்சியாக இரண்டு உலகக் கோப்பைகளில் நாங்கள் பார்த்திருக்கிறோம். உலகக் கோப்பைக்கு முன்னோடியாக சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் முன்னேறுவது மிகவும் அவசியம்.
இதையும் படிங்க:கோலி ரோஹித் இல்லை.. 2024ம் ஆண்டின் சிறந்த பேட்ஸ்மேன் இவர்தான் – முன்னாள் வீரர் பார்த்தீவ் பட்டேல் தேர்வு
அதன்படி தான் அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் நாள் முடிவில் நாங்கள் வீரர்களின் தரத்தில் நம்பிக்கை வைக்க வேண்டும். நிச்சயமாக இந்த தொடரில் தோற்ற குறியீடுகளை மாற்றுவது சவாலாக இருக்கும். இருப்பினும் நேரம் வரும்போது எங்கள் வீரர்களின் திறமை முழுவதுமாக வெளிவரும். வீரர்களின் தரத்தில் நம்பிக்கை வைப்பது மிகவும் அவசியம்” என்று கூறி இருக்கிறார்.






