சச்சின் பாண்டிங்க்கு இருந்த அதே பிரச்சனை.. விராட் கோலிக்கும் இருக்கு.. தீர்வு இதுதான் – கிரேக் சேப்பல் பேட்டி

0
138
Chappell

இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் ஆகியோர் சந்தித்த பிரச்சினைகளையே பேட்டிங்கில் விராட் கோலி சந்தித்து வருவதாக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் கிரேக் சேப்பல் தெரிவித்திருக்கிறார்.

கடந்த மூன்று நான்கு ஆண்டுகளில் விராட் கோலி இடம் இருந்து மூன்று டெஸ்ட் சதங்கள் மட்டுமே வந்திருக்கிறது. மேலும் அவர் ஆட்டம் இழக்கும் முறை மிகவும் சாதாரணமாகவும் ஒரே மாதிரியாகவும் இருப்பது பெரிய அளவில் கவலை அடிக்க கூடிய விஷயமாகவும் இருக்கிறது.

- Advertisement -

தீராத ஆப் ஸ்டெம்ப் பிரச்சனை

விராட் கோலிக்கு ஆப் ஸ்டெம்புக்கு வெளியில் வீசப்படும் பந்தில் பெரிய பிரச்சனை இருக்கிறது. இருந்தபோதிலும் கூட அவர் அப்படி வீசப்படும் பந்துகளை விக்கெட் கீப்பரிடம் விட நினைப்பதில்லை. ஒன்று இரண்டு பந்துகளை அப்படி விட்டால் கூட, அதே லைனில் பந்து கொஞ்சம் மேலே இருந்தால் உடனடியாக டிரைவ் விளையாடத் சென்று பின்புறமாக கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்து விடுகிறார்.

மேலும் அவருடைய பேட்டிங்கில் தற்பொழுது அணுகுமுறையை எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதிலும் அவருக்கு மனரீதியாக பிரச்சனைகள் இருப்பதாக கூறப்படுகிறது. அவர் தாக்கி விளையாடுவதற்கும் தற்காப்பாக விளையாடுவதற்கும் நடுவில் சிக்கிக் கொண்டிருக்கிறார் என கிரேக் சேப்பல் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

- Advertisement -

சச்சின் பாண்டிங் சந்தித்த பிரச்சனை

இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் கிரேக் சேப்பல் கூறும்பொழுது “இதிலிருந்து தெரியும் ஒரு அறிகுறி வீரரின் பேட்டிங் அணுகு முறையில் இருக்கும் மாற்றம் மட்டுமே ஆகும். விராட் கோலி தாக்கி விளையாடுவதில் மிகவும் பிரபலமானவர். ஆனால் கடந்த ஒரு சில ஆண்டுகளாக, அவர் ஒரு இன்னிங்ஸ் தொடக்கத்தில் மிகவும் சுமாரான முறையில் இருக்கிறார். இந்த நேரத்தில் அவருக்கு பெரிய அளவில் தடுமாற்றம் இருக்கிறது. இப்படி ஆன பிரச்சனைகளை கடைசி காலத்தில் சச்சின் பாண்டிங் ஆகியோரும் சந்தித்தார்கள்”

இதையும் படிங்க : வெறும் 77 ரன்.. U19 ஆசிய கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணி.. பங்களாதேஷ் பரிதாப தோல்வி

“சச்சின் மற்றும் ரிக்கி பாண்டிங் இருவரும் சரளமான முறையில் விளையாடுவதற்கு அவர்களுக்கு முதலில் 20 முதல் 30 ரன்கள் தேவைப்பட்டது. அதை அவர்கள் எடுத்த பின்பே தங்களுடைய பழைய நிலைக்கு செல்ல முடிந்தது. நீங்கள் 20 முதல் 30 ரன்கள் எடுக்கும் பொழுது நீங்கள் நம்பிக்கையாக உணர்வீர்கள். உங்களுக்கு பழைய சரளமான முறையில் விளையாடுவதற்கும் வரும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -