இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி திடீரென பரபரப்பான கட்டத்தை எட்டி பிறகு மழையால் டிராவில் முடிவடைந்து இருக்கிறது.
இந்த போட்டியில் மழை ஒரு பெரிய காரணியாக அமைந்தது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீசுவதாக அறிவித்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணிக்கு ஹெட் 152 ரன்கள் எடுக்க, அந்த அணி 445 ரன்கள் குவித்தது. பும்ரா ஆறு விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இந்தியாவை காப்பாற்றிய மழை
இதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணிக்கு முன்னணி பேட்ஸ்மேன்கள் ஏமாற்ற கேஎல்.ராகுல் 84 ஜடேஜா 77 ரன்கள் எடுத்தார்கள். ஆனால் கடைசியில் ஆகாஷ் தீப் மற்றும் பும்ரா பேட்டிங் காரணமாக இந்திய அணி ஒருவழியாக நேற்று 9 விக்கெட் இழப்புக்கு 252 எடுத்து பாலோ ஆனை தவிர்த்தது.
இன்று தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 260 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதற்கு மேல் ஆஸ்திரேலியா விளையாட வேண்டி இருப்பதாலும் மழை பெய்யும் என்பதாலும் போட்டி டிராவாகிவிடும் என எல்லோரும் நினைத்தார்கள். போட்டியில் எந்தவித பரபரப்பும் உண்டாகாது என்று கருதப்பட்டது.
பந்து வீச்சில் கலக்கிய இந்திய அணி
இந்த நிலையில் பந்து வீச்சுக்கு வந்த இந்திய அணி சிறப்பான முறையில் செயல்பட்டது. அதிரடியாக விளையாட நினைத்த ஆஸ்திரேலியா 89 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்து விட்டது. நடுவில் மழை பெய்து கொஞ்சம் நேரம் தாமதமானதால், அவர்கள் இந்த ரன்களோடு டிக்ளர் செய்து விட்டார்கள். பும்ரா மூன்று விக்கெட் கைப்பற்றினார். இதனால் இந்திய அணி அதிரடியாக பேட்டிங் செய்து வெல்லுமா? என்கின்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க : ரோகித் கோலி கொண்டாடனதுக்கு காரணமே பயம்தான்.. அஸ்வின் விஷயம் ரொம்ப பரிதாபம் – நாதன் லயன் பேட்டி
மேற்கொண்டு இந்திய அணி பேட்டிங் செய்ய வந்த பொழுது விக்கெட் இழப்பில்லாமல் எட்டு ரன்கள் எடுத்திருந்த பொழுது மழை வந்தது. இதை தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்த காரணத்தினால் இரு அணிகளும் சம்மதத்துடன் போட்டியை டிராவில் முடிந்து கொண்டன. திடீரென பரபரப்பான போட்டி மீண்டும் எதிர்பார்த்தபடியே டிராவில் முடிந்தது. அடுத்த போட்டி மெல்போர்ன் மைதானத்தில் டிசம்பர் 26 ஆம் தேதி நடக்கிறது.






