இன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா ஆட்டம் இழந்த விதம் குறித்து இந்திய வீரர் புஜாரா விமர்சனம் செய்திருக்கிறார்.
இந்திய கேப்டன் ரோஹித் சர்மா நேற்று மூன்றாம் நாள் முடிவில் ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் இருந்தார். இன்று இரண்டு பவுண்டர்கள் உடன் 10 ரன்கள் எடுத்து கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். அவரது பேட்டிங் அணுகுமுறை மற்றும் ஆட்டம் இழக்கும் முறை மிகவும் மோசமாக இருப்பது விமர்சனங்களை உருவாக்கி வருகிறது.
உங்களால் அதை செய்ய முடியாது
இந்த நிலையில் இந்திய வீரரும் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடியவருமான புஜாரா ஆஸ்திரேலிய சூழ்நிலையில் எவ்வாறு விளையாட வேண்டும்? என்பது குறித்து விளக்கி இருக்கிறார். மேலும் கேப்டன் ரோஹித் சர்மா ஆட்டம் இழந்த பந்தில் என்ன தவறு செய்தார்? என்பது குறித்தும் பேசியிருக்கிறார்.
இதுகுறித்து புஜாரா பேசும் பொழுது “அந்தப் பந்து நீங்கள் டிரைவ் ஆட கூடிய லென்த்தில் இல்லை. ஆஸ்திரேலியாவில் ஒரு ஃபுல் லென்த் பந்தை டிரைவ் ஆடுவது கூட கடினமாக இருந்ததை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் ரோஹித் சர்மா அந்த பந்தை பஞ்ச் விளையாட செய்தார். அவர் அந்த பந்தை தற்காத்து விளையாடி இருக்க வேண்டும். அதற்குப் பந்தை வரவிட்டு விளையாடி இருக்க வேண்டும். ஆனால் இவர் முன் சென்று விளையாடி தவறு செய்தார்”
காத்திருப்பதுதான் பிரச்சனை
“தற்போது ரோஹித் சர்மா அணிக்காக தன்னுடைய துவக்க இடத்தை தியாகம் செய்து ஆறாவது இடத்தில் விளையாடுகிறார். நீங்கள் வழக்கமாக சென்று ஆட்டத்தை துவங்க கூடியவராக இருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் ஆறாவது இடத்தில் பேட்டிங் செய்யும்பொழுது காத்திருக்க வேண்டியதாக இருக்கிறது. இது மனதிற்குள் நிறைய சந்தேகங்களை விதைக்கிறது என்று நினைக்கிறேன்”
இதையும் படிங்க : தோனி ஸ்டைலில் ஆஸியில் ரோகித் ஓய்வு பெறப் போகிறாரா?.. அவுட் ஆனதும் கொடுத்த சிக்னல்.. பரவும் செய்தி
“அதாவது நீங்கள் ஒரு துவக்க வீரராக எதைப் பற்றிய முன் யோசனையும் இல்லாமல் ஆட்டத்தை துவங்கி பழக்கப்பட்டு விட்டீர்கள். ஆனால் நீங்கள் ஆறாவது இடத்தில் களம் இறங்கும் பொழுது போட்டியை பார்த்து காத்திருக்கிறீர்கள். இது உங்களுக்கு உதவாது. உங்களுக்கு வழக்கமான வேகத்தை கொடுக்காது” என்று கூறியிருக்கிறார்.






