ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப் போகிறார்? என்ற செய்திகள் இணையத்தில் வேகமாக ஒரு முக்கிய காரணத்தினால் பரவி வருகிறது. ஆனால் இதன் உண்மை தன்மை குறித்து தெரியவில்லை.
ரோகித் சர்மா கடைசி பத்து டெஸ்ட் இன்னிங்ஸ்களில் ஒரே ஒரு அரை சதம் மட்டுமே அடித்திருக்கிறார். அவருடைய பேட்டிங் ஃபார்ம் சமீபத்தில் மிக மோசமாக இருக்கிறது. குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருடைய தகுதிக்கு தகுந்த பங்களிப்பை அவரால் பேட்டிங்கில் இந்திய அணிக்கு செய்ய முடியாமல் தடுமாறுகிறார். மேலும் அவர் கேப்டனாக இருப்பதும் அணிக்கு கூடுதல் சுமையாக மாறுகிறது.
பேட் கம்மின்ஸ் – ரோகித் சர்மா
ஆஸ்திரேலியா கேப்டனின் பந்துவீச்சில் இந்திய கேப்டனுக்கு எந்த வித க்ளுவும் இல்லாமல் இருக்கிறது. சாதாரணமாக தடுத்து விளையாட வேண்டிய பந்துகளை கூட விக்கெட்டாக மாற்றி வெளியேறிக் கொண்டிருக்கிறார். கம்மின்ஸ் பந்துவீச்சில் ரோகித் சர்மாவின் தடுமாற்றம் தொடர்ந்து மாறாமல் அப்படியே இருந்து வருகிறது.
இன்று மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 27 பந்துகளை சந்தித்து 10 ரன்கள் எடுத்து கம்மின்ஸ் வீசிய ஒரு சாதாரண பந்தை விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ரோகித் சர்மா பரிதாபமாக ஆட்டம் இழந்தார். மேலும் முதல் இன்னிங்சில் கம்மின்ஸ் பந்துவீச்சில்தான் ஆட்டம் இழந்திருந்தார். இரண்டாவது டெஸ்டிலும் இதுவே நடந்தது. மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆறாவது முறையாக கம்மின்ஸ் ரோகித் சர்மாவை வெளியேற்றினார்.
ஓய்வு பெறுவதற்கான சிக்னலா?
இன்று ஆட்டம் இழந்து வெளியேறிய இந்திய கேப்டன் ரோகித் சர்மா தன்னுடைய கையுறைகளை மைதானத்திற்கு வெளியே பவுண்டரி லைனில் போட்டுவிட்டு சென்றார். பொதுவாக ஓய்வு பெறக்கூடிய வீரர்கள் இவ்வாறு கையுறைகளை வெளியில் வைத்து விட்டு சென்று விடுவார்கள். மேற்கொண்டு தாங்கள் இதை அணியப் போவதில்லை என்பதற்கான குறியீடாக அது அமையும். இது கிரிக்கெட்டில் ஒரு வழக்கமாக இருந்து வந்திருக்கிறது.
இதையும் படிங்க : 54 பந்து 39 ரன்.. ஃபாலோ ஆனில் காப்பாற்றிய ஆகாஷ் தீப் பும்ரா.. இந்தியா அணி தப்பிக்குமா?.. 3வது டெஸ்ட்
எனவே ரோகித் சர்மா தற்பொழுது கேப்டன் பொறுப்பிலும், பேட்டிங்கிலும் மிக மோசமான சூழ்நிலையில் இருப்பதால், தோனியை போலவே ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் இருந்து ஓய்வு பெறப் போகிறாரா? என்கின்ற யூகங்கள் சமூக வலைதளங்களில் பரவுகிறது. ஆனால் இது சம்பந்தமாக கிரிக்கெட வல்லுனர்களிடமிருந்து இன்னும் எந்த கருத்துக்களும் வெளிவரவில்லை.






