- நியூசிலாந்து அணி சொந்த மண்ணில் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இரண்டாவது இன்னிங்ஸில் ரன்கள் எனும் பிரம்மாண்ட முன்னிலை பெற்று இருக்கிறது.
தற்போது நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நியூஸிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளையும் வென்று ஏற்கனவே இங்கிலாந்து அணி இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றி விட்டது.
காப்பாற்றிய சான்ட்னர்
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீச, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணிக்கு கடைசி கட்டத்தில் வந்து 117 பந்துகளில் மிச்சல் சான்ட்னர் 76 ரன்கள் எடுத்தார். அவரது அதிரடியில் காரணமாக நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 347 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து பந்துவீச்சில் பிரைடன் கார்ஸ் 4 விக்கெட் வீழ்த்தினார்.
இதைத் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 143 ரன்கள் மட்டும் எடுத்து சுருண்டது. அந்த அணிக்கு ஜோ ரூட் அதிகபட்சமாக 32 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் மேட் ஹென்றி 4, வில்லியம் ஓ’ரூர்க் மற்றும் சான்ட்னர் தலா 3 விக்கெட் கைப்பற்றினார்கள்.
வில்லியம்சன் மெகா சாதனை
இதைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய நியூசிலாந்து அணிக்கு துவக்க ஆட்டக்காரர் யல் யங் 60 ரன்கள் எடுத்தார். ரச்சின் ரவீந்திரா 44, டேரில் மிட்சல் 60 ரன்கள் எடுத்தார்கள். இன்னொரு முனையில் சிறப்பாக விளையாடிய கேன் வில்லியம்சன் 204 பந்துகளில் 20 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 156 ரன்கள் குவித்தார். நியூசிலாந்து அணி 453 ரன்கள் குவித்தது. ஜேக்கப் பெத்தேல் 3 விக்கெட் கைப்பற்றினார்.
இதையும் படிங்க : ஜிம்பாப்வே டெஸ்ட்.. ஆப்கான் அணி அறிவிப்பு.. ரஷித் கான் வருகை.. 7 வீரர்கள் அறிமுகம்.. சிறப்பு தொடர்
இதைத் தொடர்ந்து 658 ரன்கள் என்ற மெகா இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 18 ரன்கள் எடுத்திருக்கிறது. மேலும் தற்போது போட்டி நடந்து வரும் ஹாமில்டன் மைதானத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து ஐந்து சதங்களை வில்லியம்சன் அடித்திருக்கிறார். 147 ஆண்டுகால சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மைதானத்தில் தொடர்ந்து ஐந்து டெஸ்ட் சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார்.






