இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டிராவிஸ் ஹெட் மற்றும் சிராஜ் இடையே நடைபெற்ற வார்த்தை மோதல் முடிவுக்கு வந்துவிட்டதாக சம்பந்தப்பட்ட டிராவிஸ் ஹெட் தெரிவித்திருக்கிறார்.
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த ஆஸ்திரேலிய அணி அடுத்த நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை தற்காலிகமாக சமன் செய்திருக்கிறது. இந்த வெற்றிக்கு டிராவிஸ் ஹெட் முக்கிய காரணமாக இருந்து ஆட்டநாயகன் விருது வென்றார்.
சூடான வார்த்தை மோதல்கள்
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் முதல் இன்னிங்ஸில் டிராவிஸ் ஹெட் வழக்கம் போல் அதிரடியில் ஈடுபட்டு 141 பந்துகளில் 140 ரன்கள் குவித்து இந்திய அணிக்கு மீண்டும் ஒருமுறை தலைவலியாக மாறினார். அவரை வெளியேற்றுவதற்குள் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு பெரிய கடினமாகப் போய்விட்டது.
இந்த நிலையில் முகமது சிராஜ் அவரை வெளியேற்ற, இருவருக்கும் இடையே ஏதோ வார்த்தை பரிமாறல்கள் நடைபெற்றது. முகமது சிராஜ் அவரை களத்தை விட்டு வெளியே செல் என்று சைகை செய்தார். பிறகு சிறந்த பந்துவீச்சு என சிராஜை பாராட்டியதாகவும், ஆனால் அவர் தவறாக புரிந்து கொண்டார் என ஹெட் கூறினார். ஆனால் சிராஜ் நீங்கள் வீடியோவை பாருங்கள் அவர் கெட்ட வார்த்தையில் பேசினார் அதனால் நான் கோபப்பட்டேன் என்று தெரிவித்திருந்தார்.
பொய் சொன்ன ஹெட்
இந்த நிலையில் ஹெட் பத்திரிக்கையாளர் சந்திப்பில் சிராஜை தான் பாராட்டியதாக கூறியது பொய் என சிராஜ் வெளிப்படையாக பத்திரிக்கையாளர்களிடம் கூறினார். எனவே இருவருக்கு இடையில் ஆன இந்த பிரச்சனை தொடர்ந்து சென்றது. ஆனால் போட்டியின் முடிவுக்குப் பிறகு இந்த பிரச்சனை முடிந்து விட்டதாக ஹெட் வெளியில் வந்து கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : 371 ரன்.. பெரி 75 பந்து ருத்ர தாண்டவம்.. இந்திய பெண்கள் அணி படுதோல்வி.. ஆஸி தொடரை கைப்பற்றியது
இதுகுறித்து ஹெட் கூறும் பொழுது “சிராஜ் இந்த பிரச்சனையில் இருந்து வெளியே வந்து என்னிடம் இது ஒரு தவறான புரிதலினால் ஏற்பட்டது என்று கூறினார். நாங்கள் இந்த விஷயத்தில் முன்னேறி செல்வோம். ஒரு சிறப்பான வார்த்தை இந்த விஷயத்தின் பொருட்டு நாங்கள் அழித்துக் கொள்ள விரும்பவில்லை. நானும் சிராஜும் இனிமையாக இருக்கிறோம். எனவே தொடர்ந்து முன்னேறி செல்வோம்” என்று கூறியிருக்கிறார்.






