தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு பதிலடி கொடுத்திருக்கிறது.
தற்போது இலங்கை அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இதில் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று இருந்தது.
தென் ஆப்பிரிக்கா ரன் குவிப்பு
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணிக்கு சிறப்பாக விளையாடிய ரியான் ரிக்கல்ட்டன் 250 பந்துகளில் 101 ரன்கள், வெர்ன்னினே 133 பந்துகளில் 105 ரன்கள் குவித்தார்கள்.
இதனால் தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸில் 358 ரன்கள் குவித்தது. இலங்கை அணியின் பந்துவீச்சில் லகிறு குமாரா 4, அஷிதா பெர்னாடோ 3, விஷ்வா பெர்னாடோ 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.
இலங்கை அணி பதிலடி
இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய இலங்கை அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் கருணரத்தினை 43 பந்துகளில் 20 ரன்கள், பதும் நிஷாங்கா 157 பந்துகளில் 89 ரன்கள் எடுத்தார்கள். அடுத்து தினேஷ் சந்திமால் 97 பந்துகளில் 44 ரன் எடுத்தார்.
நேற்று இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 3 விக்கெட் இழப்புக்கு 242 ரன் எடுத்து இருக்கிறது. களத்தில் மேத்யூஸ் 71 பந்துகளில் 40 ரன்கள், கமிந்து மெண்டிஸ் 38 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து இருக்கிறார்கள். தற்போது இலங்கை அணி 116 ரன்கள் மட்டும் பின் தங்கி இருக்கிறது.
இதையும் படிங்க : நான் எவ்ளவோ ட்ரை பண்ணேன்.. இந்த விஷயத்துல தோனி மாதிரி இருக்க முடியல.. அவர்தான் பெஸ்ட் – ரிக்கி பாண்டிங் பேட்டி
தற்போது சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்கா இலங்கை அணிக்கு எதிராக இந்த போட்டியில் தோற்றாலோ அல்லது டிரா செய்தாலோ, அடுத்து மீண்டும் சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியை தோற்றால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் தென் ஆப்பிரிக்கா இந்திய அணியை விட புள்ளி பட்டியலில் பின் தங்கும். தற்போது இலங்கையின் சிறப்பான பேட்டிங் இதற்கான ஒரு சிறு வாய்ப்பை உருவாக்கி இருக்கிறது.






