இந்திய கிரிக்கெட் அணியில் வெற்றிகரமான கேப்டனாக கருதப்படுபவர் மகேந்திர சிங் தோனி. அவரது தலைமையில் இந்திய அணி அனைத்து விதமான ஐசிசி கோப்பைகளையும் வெற்றி பெற்று வரலாறு படைத்திருக்கிறது.
இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் மகேந்திர சிங் தோனி குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
இந்தியாவின் சிறந்த கேப்டன் தோனி
இந்திய கிரிக்கெட் அணியில் மகேந்திர சிங் தோனி கேப்டன் பொறுப்பு ஏற்ற பிறகு இந்திய அணியின் நிலை என்ன என்பது அனைத்து இந்திய ரசிகர்களுக்கும் தெரிந்த ஒன்றாகவே உள்ளது. 1983ஆம் ஆண்டுக்குப் பிறகு 2007ம் ஆண்டு மகேந்திர சிங் தோனி தலைமையில்தான் டி20 உலக கோப்பையை வெற்றி வெற்றி வரலாறு படைத்தது. அதற்குப் பிறகு 2011 ஆம் ஆண்டு ஒரு நாள் உலகக் கோப்பையை வெற்றி பெற்று சாதனை படைத்ததோடு மட்டுமல்லாமல் டெஸ்ட் அரங்கில் நம்பர் ஒன் நிலையில் இந்திய அணி இருந்தது.
இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்த ரிக்கி பாண்டிங் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதில் மகேந்திர சிங் தோனியின் அளவுக்கு வேறு எந்த கிரிக்கெட் வீரையும் தான் பார்த்ததில்லை எனவும் தன்னால் கூட அந்த அளவு உணர்ச்சிகளை முழுமையாக கட்டுப்படுத்த முடியாது எனவும் மூன்று முறை உலகக் கோப்பை வென்ற முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் கூறி இருக்கிறார். இந்தியாவின் எந்த பகுதியிலும் தோனியின் மதிப்பு என்பது உயரிய நிலையிலே இருக்கும் எனவும் அவரது தலைமையில் இந்திய கிரிக்கெட் எவ்வளவு பெரிய உயரத்தை அடைந்தது எனவும் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
என்னால் கூட அது முடியாது
இது குறித்து பாண்டிங் விரிவாக கூறும்போது “மகேந்திர சிங் தோனி கிரிக்கெட் களத்தில் ஒருபோதும் உணர்ச்சிகளை அதிக அளவில் வெளிப்படுத்தியதாக தெரியவில்லை. இது ஒரு நல்ல தலைவரின் பண்பாகும். நானும் கிரிக்கெட் களத்தில் எவ்வளவு முயற்சித்து பார்த்திருக்கிறேன். ஆனால் என்னால் உணர்ச்சிகளை முழுமையாக கட்டுப்படுத்த முடியாது. அவர் கேப்டனாக இருந்தபோது இந்திய அணி எப்போதுமே நான் சிறந்த இடத்தில் இருந்துள்ளது.
இதையும் படிங்க:கம்பீர் சொன்ன அட்வைஸ்.. செய்து மாஸ் காட்டிய ரோகித்.. கோச் ஆகும் முன்னே போட்ட பக்கா ஸ்கெட்ச்
தோனி எப்போதுமே தனது வீரர்களிடமிருந்து சிறந்தவற்றை பெறக்கூடிய சாமர்த்தியத்தை பெற்றிருந்தார். அவரது கட்டுப்பாட்டிலேயே அனைத்து விஷயங்களும் இருக்கும். மேலும் அணி வீரர்களும் தோனியை அதிக அளவில் நேசித்தனர். நான் இப்போது இந்தியாவில் அதிக நேரம் செலவிடுகிறேன். அதனால் தோனி உலகின் அந்தப் பகுதியில் எவ்வளவு மதிக்கப்படுகிறார் என்பது தெரியும். நீங்கள் உலகம் முழுவதும் பயணம் செய்தாலும் கிரிக்கெட் ரசிகர்களிடம் பேசினாலும் தோனியின் பண்பு எத்தகையது, அவர் களத்தில் எவ்வளவு அமைதியாக செயல்படுவார் என்பது குறித்து தான் கூறுவார்கள்” என்று கூறுகிறார்.