வெறும் 18 ஓவர்.. அயூப் 53 பந்து மேஜிக்.. ஜிம்பாப்வேயை வீழ்த்திய பாகிஸ்தான் அணி.. ODI தொடர் தற்காலிக சமன்

0
268
Ayub

தற்போது நடந்து முடிந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி ஜிம்பாப்வே அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று மூன்று கோட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 1-1எனத் தற்காலிகமாக சமன் செய்திருக்கிறது.

பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுவதற்கு ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் நடைபெற்ற மூன்று கோட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பந்துவீச்சில் பதிலடி கொடுத்த பாகிஸ்தான்

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பேட்டிங் செய்வது என அறிவித்தது. முதல் போட்டியில் தோல்வி அடைந்திருந்த பாகிஸ்தான் அணி அதற்கு பதில் அளித்த தரும் விதமாக பந்து வீச்சில் அசத்தலாக செயல்பட்டது. ஜிம்பாப்வேவின் மெதுவான ஆடுகளத்திற்கு தகுந்தபடி சுழல் பந்துவீச்சாளர்களை வைத்து அவர்களை முடக்கியது.

முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 32.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 142 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது. டியோன் மேயர்ஸ் 30 பந்தில் 33 ரன்கள், சீன் வில்லியம்ஸ் 39 பந்தில் 31 ரன்கள் எடுத்தார்கள். பாகிஸ்தான் பந்துவீச்சில் அப்ரார் அகமது 4, ஆகா சல்மான் 3 விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

சையும் அயூப் அதிரடி பேட்டி

இதைத்தொடர்ந்து குறைந்த இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் இளம் இடது கை தொடக்க ஆட்டக்காரர் சையும் அயூப் அதிரடியில் மிரட்டினார். வெறும் 53 பந்துகளில் மிரட்டலாக சதம் அடித்தார். ஒரு நாள் வரலாற்றில் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மூன்றாவது அதிவேக சதமாக இது பதிவானது. முதல் இடத்தில் ஷாஹித் அப்ரிடி இந்தியாவுக்கு எதிராக 37 பந்தில் சதம் அடித்தது இருக்கிறது.

இதையும் படிங்க : ஒரு ஓவரில் 6 சிக்ஸ்.. கம்பீர் கோச் வளர்த்திய வீரர்.. ரிக்கி பாண்டிங் வைத்த குறி.. பயிற்சியாளர் பேட்டி

இதைத்தொடர்ந்து சையும் அயூப் ஆட்டம் இழக்காமல் 62 பந்துகளில் 17 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உடன் 113 ரன்கள், அப்துல்லா ஷபிக் 48 பந்தில் 32 ரன்கள் எடுக்க, பாகிஸ்தான் அணி வெறும் 18 புள்ளி இரண்டு ஓவரில் இலக்கை எட்டி பத்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்திருக்கிறது. மேலும் தொடரை 1-1 எனவும் சமன் செய்திருக்கிறது.

- Advertisement -