விராட் பாய் என்னை இதை செய்ய சொல்லி இருக்கார்.. அதுக்காக இப்படி தயாராகிட்டு வரேன் – ஜெய்ஸ்வால் பேட்டி

0
204
Jaiswal

இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலியை பார்த்து தான் ஊக்கம் அடைவதாகவும் அவர் தன்னை வழி நடத்துவதாகவும் இந்திய இளம் வீரர் ஜெய்ஸ்வால் கூறியிருக்கிறார்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய மண்ணில் தன்னை நிரூபித்திருக்கும் ஜெய்ஸ்வாலுக்கு தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடர் சரியாக செல்லவில்லை. இந்த நிலையில் இன்னொரு மிகப்பெரிய வெளிநாட்டு டெஸ்ட் தொடரான ஆஸ்திரேலிய டெஸ்ட் அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானதாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

விராட் பாஜி சொல்லி இருக்கிறார்

தனக்கு விராட் கோலி கூறியுள்ள அறிவுரை குறித்து பேசி உள்ள ஜெய்ஸ்வால் ” நான் சீனியர் லெவல் கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய போது இந்த மட்டத்தில் விராட் கோலி விளையாட ஆரம்பிக்கும் பொழுது எப்படி சமாளித்தார் என்பது குறித்து நான் அவரிடம் கேட்டேன். நான் என்னுடைய அன்றாடங்களில் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்றும், செயல் முறையை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என அவர் எனக்கு அறிவுரை கூறினார்”

“மேலும் விராட் கோலி தனது அன்றாட பயிற்சி விஷயங்களை தொடர்ந்து சலிப்பில்லாமல் செய்து வருவதை நான் பார்த்து வருகிறேன். உண்மையில் இதையெல்லாம் அவர் செய்வதை நான் பார்க்கும் பொழுது, நான் தொடர்ந்து வேலையில் ஈடுபடுவதற்கும் என்னுடைய வேலைகளில் மாற்றத்தை செய்வதற்கும் தூண்டுவதாக அமைகிறது. என்னை பொறுத்தவரை நான் நாளாக நாளாக மிகவும் சரியாக இருப்பேன் என்று நினைக்கிறேன்”

- Advertisement -

எல்லாவற்றுக்கும் தயாராக இருக்கிறோம்

“இது என்னுடைய முதல் ஆஸ்திரேலிய டெஸ்ட் சுற்றுப்பயணம். நான் இந்தத் தொடரில் விளையாடுவதற்கு மிகவும் ஆர்வமாக உற்சாகமாக இருக்கிறேன். இங்குள்ள சூழ்நிலைகள் மற்றும் ஆடுகளங்கள் என எல்லாமே இந்தியாவை விட மிகவும் வித்தியாசமானது. ஆனால் இதெல்லாம் எங்களுக்கு தெரியும். எனவே நாங்கள் மனதளவில் மிகவும் தயாராக இருக்கிறோம்”

இதையும் படிங்க : வெஸ்ட் இண்டீஸ் பங்களாதேஷ் டெஸ்ட்.. இந்தியாவில் எந்த டிவியில் பார்க்கலாம்?.. போட்டி அட்டவணை முழு விவரம்

“நான் நன்றாக தூங்கவும், பயிற்சிக்கு முன்பு நன்றாக சாப்பிடவும் முயற்சி செய்கிறேன். என்னுடைய ரெக்கவரியில் நான் முழு கவனம் செலுத்துகிறேன். மேலும் பயிற்சி அமர்வுகளுக்கு மிகவும் புத்துணர்ச்சியாக வருவதை நான் உறுதி செய்கிறேன். இந்த வாய்ப்பு கிடைக்கப்பெற்றதற்கு நான் மிகவும் பாக்கியம் செய்திருக்கிறேன்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -