53 வருட ODI வரலாறு.. 49 ரன்.. முதல் முறை ஆஸி மோசமான சாதனை.. நிகழ்த்திக் காட்டிய பாகிஸ்தான் அணி

0
780
Australia

ஆஸ்திரேலியா அணி தனது 53 வருட ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தான அணிக்கு இடையேயான தொடரில் மோசமான சாதனை ஒன்றை படைத்திருக்கிறது.

பாகிஸ்தான் அணி முகமது ரிஸ்வான் தலைமையில் ஆஸ்திரேலியாவிற்கு தலா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடுவதற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது.

- Advertisement -

22 ஆண்டு சரித்திர வெற்றி

பாகிஸ்தான் அணியின் இந்த ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் முதலில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி கடுமையாக போராடி தோல்வி அடைந்தது.

இதைத்தொடர்ந்து இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணியை முதலில் பேட்டிங் செய்ய வைத்து குறைந்த ஸ்கோருக்கு ஆல் அவுட் செய்து, தொடக்க ஆட்டக்காரர்களின் சிறப்பான பங்களிப்பால் எளிதான இரண்டு வெற்றிகளை பெற்றது.

- Advertisement -

இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி 22 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியா மண்ணில் ஒரு சர்வதேச கிரிக்கெட் தொடரை வென்றது. சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக தோல்வி அடைந்து மிகப்பெரிய குழப்பத்தில் இருந்த பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு, ஆஸ்திரேலிய மண்ணில் கிடைத்த இந்த தொடர் வெற்றி மிகப்பெரிய ஊக்கமாக அமைந்திருக்கிறது.

53 வருட மோசமான சாதனை

பாகிஸ்தானுக்கு எதிராக நடந்து முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் ஒருவர் கூட அரைசதம் அடிக்கவில்லை. முதல் ஒருநாள் போட்டியில் ஜோஸ் இங்லீஷ் அடித்த 49 ரன்களே, இந்தத் தொடரில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஒருவர் அடித்த அதிகபட்ச ரன்னாக இருக்கிறது. 53 வருட ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலியா அணிக்கு இரு நாடுகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஒருவர் கூட அரைசதம் அடிக்காத நிகழ்வு இதுவே முதல் முறையாகும்.

இதையும் படிங்க : 3-0 தோல்வி.. வீடியோ போடவே மனசு வரல.. ப்ளீஸ் இதை மட்டும் செய்யாதிங்க – அஸ்வின் உருக்கமான வேண்டுகோள்

ஆஸ்திரேலியா அணிக்கு இந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அதிக ரன் அடித்தவர்கள் :

ஜோஷ் இங்கிலிஸ்-49 (முதல் ஒருநாள்)
ஸ்டீவ் ஸ்மித் – 44 (முதல் ஒருநாள்)
ஸ்டீவ் ஸ்மித் – 35 (2வது ஒருநாள்)
பாட் கம்மின்ஸ் – 32 (முதல் ஒருநாள்)
சீன் அபோட் – 30 (3வது ஒருநாள்

- Advertisement -