தென் ஆபிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அதிரடியாக சதம் அடித்த சஞ்சு சாம்சன் எல்லா பெருமைகளுக்கும் தகுதியான வீரர் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் அகமத் சேஷாத் பாராட்டியிருக்கிறார்.
நேற்று சஞ்சு சாம்சன் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 50 பந்துகளை சந்தித்து 7 பவுண்டர்கள் மற்றும் 10 சிக்ஸர்கள் உடன் 17 ரன்கள் குவித்தார். மேலும் இது அவருக்கு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியான இரண்டாவது சதமாக அமைந்திருக்கிறது.
தேர்வுக் குழுவுக்கு ஏற்பட்டிருக்கும் புதிய தலைவலி
இந்தியத் தேர்வுக்குழு சுப்மன் கில்லை இந்திய வெள்ளைப்பந்து அணிகளுக்கு துணை கேப்டனாக பரிந்துரை செய்து பொறுப்பை வழங்கியது. இதன் காரணமாக இந்திய டி20 அணியின் துவக்க ஆட்டக்காரராக கில் இடம் பெறுவது உறுதியான ஒன்றாக இருக்கிறது. அதே சமயத்தில் ஜெய்ஸ்வாலும் தனது தொடக்க வீரர் இடத்தை உறுதிப் படுத்தி இருப்பவர்.
எனவே தற்போது சஞ்சு சாம்சன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இரண்டு சதங்கள் தொடர்ந்து அடித்து இருக்கின்ற காரணத்தினால், அடுத்து கில் வந்த பிறகு சஞ்சு சாம்சனை நீக்கினால் அது பெரிய சர்ச்சைகளை உருவாக்கும். ஏற்கனவே கில்லுக்காக ருதுராஜை நீக்கியதும் சர்ச்சையாகி இருக்கிறது. எனவே தற்பொழுது தேர்வுக் குழுவுக்கு இது புதிய தலைவலியாக மாறி இருக்கிறது.
அந்தக் கேள்வியை கேட்டு இருக்கிறார்
இதுகுறித்து அகமத் சேஷாத் கூறும் பொழுது “சஞ்சு இப்பொழுது உண்மையில் நிறைய பெருமைகளுக்கு தகுதியான வீரர். ஏனென்றால் அவருடைய சமீபத்திய ஆட்டங்கள் சாதாரணமானவை கிடையாது. அவர் இளைய அணியுடன் விளையாடினாலும் மூத்த அணியுடன் விளையாடினாலும், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து இரண்டு சதங்கள் அடிப்பது என்பது சாதாரணமான விஷயமே இல்லை”
இதையும் படிங்க : ஐபிஎல் தொடரில் இந்த விதி பெரிய தலைவலி.. கோச் எங்களுக்கு பெரிய சிரமமா இருக்கு – ஜஸ்டின் லாங்கர் கருத்து
“சஞ்சு செய்தது எளிதானது என்றால் அதை சர்வதேச கிரிக்கெட்டில் பலரும் சாதாரணமாக செய்ய முடியும். ஆனால் அது எளிதானது கிடையாது. இந்த அற்புதமான ஆட்டத்தின் மூலம் தனது தொழில் முறை கிரிக்கெட் வாழ்க்கையில் தன்னுடைய இடத்தை உறுதி செய்திருக்கிறார். தொடர்ந்து இரண்டு சதங்கள் அடித்ததின் மூலம் தற்போது அவர் ‘என்னை பார்த்தால் உங்களுக்கு ஆச்சரியமாக இல்லையா?’ என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் என்று பாராட்டி இருக்கிறார்.






