இந்திய அணியின் பேட்ஸ்மேன் கேஎல்.ராகுல் உலகத்தரம் வாய்ந்தவர் என்றும் ஆனால் அவரை சீக்கிரத்தில் வெளியேற்றி விட முடியும் என ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் ஸ்காட் போலந்து கூறியிருக்கிறார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் பேட்டிங் யூனிட்டில் சர்ப்ராஸ் கான் இடத்திற்கு முதலில் கேஎல்.ராகுலுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்று தெரிகிறது. எனவே அவர் மீதும் ஆஸ்திரேலியா நிர்வாகத்தின் கண்கள் இருக்கிறது.
இந்திய ஏ அணி போட்டி
தற்போது ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் இந்திய ஏ அணி ருதுராஜ் தலைமையில் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கேஎல்.ராகுல் மற்றும் துருவ் ஜுரல் இருவரும் இந்திய அணியில் இணைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் பயிற்சி பெறுவதற்கு இவர்களுக்கு முக்கியமாக இது அமைகிறது.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய ஏ அணியில் ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடும் வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் போலந்து இடம் பெற்று இருக்கிறார். எனவே கேஎல்.ராகுல் மற்றும் ஸ்காட் போலந்து டெஸ்ட் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே பயிற்சி போட்டியிலேயே ஏ அணிகளில் மோதிக்கொள்ள இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கேஎல்.ராகுலை வெளியேற்ற முடியும்
இது குறித்து ஸ்காட் போலந்து கூறும் பொழுது “இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் கேஎல்.ராகுலுக்கு பந்து வீசும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. ஆனால் அவருக்கு எதிராக தற்பொழுது எங்கள் மண்ணில் விளையாடுவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது”
இதையும் படிங்க : ஆஸி டெஸ்ட்.. ரோகித் கோலி இந்த ஒரு மாற்றம் மட்டும் செய்யுங்க.. கப் உறுதி – பாகிஸ்தான் டேனிஷ் கனேரியா அறிவுரை
“கேஎல்.ராகுல் உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன். இருந்தபோதிலும் அவருக்கு எதிராக எங்களால் விரைவில் முன்னேற முடியும் என்று நம்புகிறேன். இந்த கோடை காலத்தில் நாங்கள் அவர் மீது ஆதிக்கம் செலுத்துவோம். இங்கு பவுன்ஸ் மற்றும் வேகம் ஆடுகளத்தில் இருக்கும். எனவே இந்தியாவில் அணியை கட்டமைப்பதற்கும் இங்கும் வித்தியாசம் பெரிதாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.






