தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் சூழ்நிலையில் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த சூழ்நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கு இடையே இரண்டாவது போட்டியில் வங்கதேச அணி பேட்டிங் செய்யும்போது ஒரு வினோத சம்பவம் நடந்துள்ளது.
வங்கதேசம் தென்னாப்பிரிக்கா இரண்டாவது டெஸ்ட்
தென் ஆப்பிரிக்கா அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதற்கு முன்னர் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டி சோட்டாகிராமில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு 575 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. இதில் தென் ஆப்பிரிக்காவின் டோனி டி ஜார்ஜ் மற்றும் ஸ்டப்ஸ் ஆகியோர் சிறப்பாக விளையாடி சதம் அடித்தனர்.
இதை அடுத்து தனது முதல் இன்னிங்ஸ் வங்கதேச அணி விளையாட ஆரம்பித்தது. தென் ஆப்பிரிக்கா அணி தரப்பில் முதல் ஓவரை ககிசோ ரபாடா ஆரம்பித்தார். அதற்குள்ளாக மைதானத்திற்கு நடுவே தென் ஆப்பிரிக்கா வீரர் செனுரன் முத்துசாமி அங்கும் இங்கும் ஓடியதால் இது ஐசிசி விதிமுறைகளை மீறும் வகையில் அமைந்ததால் தென்னாபிரிக்க அணிக்கு அபராதமாக ஐந்து ரன்கள் விதிக்கப்பட்டது. இதனால் வங்கதேச அணிக்கு கூடுதலாக ஐந்து ரன்கள் கிடைத்தது.
ஒரு பந்து 10 ரன்
இதை அடுத்து தனது முதல் ஓவரை ரபாடா வீச முதல் பந்தை இஸ்லாம் டாட் செய்தார். அதற்குப் பிறகு இரண்டாவது பந்தை வீசிய நிலையில் பந்து வைடாக சென்று விக்கெட் கீப்பரை தாண்டி அது பவுண்டரி எல்லையை அடைந்தது. மேலும் அது நோபால் என்று அறிவிக்கப்பட்டதால் வங்கதேச அணிக்கு மேலும் 5 ரன்கள் கிடைத்தது. இதனால் ஒரு பந்து மட்டுமே வீசிய நிலையில் ஒரு அணி 10 ரன்கள் கொடுத்த வினோத சம்பவம் தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே என போட்டியில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
10 runs after 1 delivery without bat hitting ball: Have you ever seen this before?! 😮#ICYMI: South Africa were penalised 5 runs earlier for Muthuswamy running straight down the pitch, making Bangladesh start their innings at 5/0.#BANvSAonFanCode pic.twitter.com/nAHFUQBXyK
— FanCode (@FanCode) October 30, 2024
இதையும் படிங்க:இந்திய மக்கள் எங்களுக்கு செஞ்ச மாதிரி.. ரோஹித் அணி பாகிஸ்தான் வரப்போ எங்க மக்களும் இதை செய்வாங்க – பாக் கேப்டன் பேட்டி
மேலும் தனது முதல் இன்னிங்ஸ் தொடங்கிய வங்கதேச அணி 9 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட் இழப்புக்கு 38 ரன்கள் குவித்து இருந்த நிலையில் இரண்டாவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இன்னும் 537 ரன்கள் வங்கதேச அணி பின்தங்கி இருக்கும் நிலையில் தோல்வியை தவிர்க்க இதற்குப் பின்னர் வங்கதேச அணி நிலைத்து நின்று ஆடுவது கட்டாயம். எனவே இரண்டாவது தோல்வியை தவிர்க்குமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.






