ஆஸி ODI டி20.. பாகிஸ்தான் அணிகள் அறிவிப்பு.. கேப்டன் விஷயத்தில் சுவாரசிய முடிவு.. 3 ஸ்டார் வீரர்கள் வருகை

0
755
Pakistan

பாகிஸ்தான அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாட இருக்கிறது. இதற்கான அணிகள் அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது.

பாகிஸ்தான அணியின் இந்த ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் முதலில் நவம்பர் 4ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரையில் ஒருநாள் கிரிக்கெட் தொடரும், நவம்பர் 14ஆம் தேதி முதல் நவம்பர் 18ஆம் தேதி வரையில் டி20 கிரிக்கெட் தொடரும் நடைபெற இருக்கிறது.

- Advertisement -

பாபர் அசாம் விஷயத்தால் நீக்கப்பட்ட வீரர்

தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் ஆஸ்திரேலியா வெள்ளைப் பந்து தொடர்களுக்கான இரண்டு பாகிஸ்தான் அணிகளிலும் அதிரடி துவக்க ஆட்டக்காரர் பகார் ஜமான் பெயர் இடம்பெறவில்லை. இரண்டு அணிகளிலும் அவர் புறக்கணிக்கப்பட்டிருப்பது பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

பாபர் அசாம் பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்ட பொழுது, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முடிவை பகார் ஜாமான் வெளிப்படையாக எதிர்த்து பேசி இருந்தார். இதன் காரணமாக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

- Advertisement -

மூன்று நட்சத்திர வீரர்கள் வருகை

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நீக்கப்பட்ட பாபர் அசாம் ஷாகின் அப்ரிடி மற்றும் நஷீம் ஷா மூவரும் இரண்டு அணிகளுக்கும் திரும்பி வந்திருக்கிறார்கள். இவர்களுடன் ஹாரிஸ் ரவுப் வந்திருக்கிறார். இந்த அணிய அறிவிப்பில் ஒரு மிகப்பெரிய சுவாரசியமாக கேப்டன் மற்றும் துணை கேப்டனை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவிக்கவில்லை. அனேகமாக முகமது ரிஸ்வான் கேப்டனாகவும் சல்மான் அலி ஆகா துணை கேப்டன் ஆகவும் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

பாகிஸ்தான் ஓடிஐ அணி : அராபத் மின்ஹாஸ், பாபர் அசாம், ஹரிஸ் ரவுஃப், ஹசீபுல்லா (வி.கீ) ஜஹந்தத் கான், முகமது அப்பாஸ் அப்ரிடி, முகமது ரிஸ்வான் (வி.கீ), முஹம்மது இர்பான் கான், நசீம் ஷா, உமைர் பின் யூசுப், சாஹிப்சாதா ஃபர்ஹான், சல்மான் அலி ஆகா, ஷஹீன் ஷா அப்ரிடி, சுஃப்யான் முகிம் மற்றும் உஸ்மான் கான்.

இதையும் படிங்க : நியூசி ஜெயிக்கும்னு அவங்களே நம்பிருக்க மாட்டாங்க.. ரோஹித் அணிக்கு தப்பு நடந்ததே இங்கதான் – பாக் பாசித் அலி பேட்டி

பாகிஸ்தான் டி20 அணி : அமீர் ஜமால், அப்துல்லா ஷபீக், அராபத் மின்ஹாஸ், பாபர் அசாம், பைசல் அக்ரம், ஹாரிஸ் ரவுஃப், ஹசீபுல்லா (வி.கீ), கம்ரான் குலாம், முகமது ஹஸ்னைன், முகமது ரிஸ்வான் (வி.கீ), முஹம்மது இர்பான் கான், நசீம் ஷா, சைம் அய்யூப், சைம் அய்யூப் அலி ஆகா, ஷாஹீன் ஷா அப்ரிடி.

- Advertisement -