58/8 to 189.. ரூதர்போர்டு மீட்ட வெஸ்ட் இண்டீஸ்.. விடாது அசத்திய இலங்கை அணி.. தொடரை கைப்பற்றியது

0
301
Srilanka

தங்களது சொந்த நாட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இலங்கை அணி தொடரையும் கைப்பற்றியது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தற்போது இலங்கை அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இந்த தொடரில் முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகித்தது.

- Advertisement -

மழையால் பாதிக்கப்பட்டு ஓவர் குறைப்பு

இன்று போட்டி துவங்குவதற்கு முன்பாகவே மழை வந்த காரணத்தினால் 44 ஓவர்களாக போட்டிக்கு குறைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து டாசில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்வது என அறிவித்தது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி தங்களுடைய முக்கிய 8 விக்கெட்டுகளை வெறும் 58 ரன்களுக்கு இழந்துவிட்டது.

இதைத்தொடர்ந்து ஒன்பதாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரூதர்போர்டு மற்றும் குடகேஷ் மோட்டி இருவரும் மிகச் சிறப்பாக விளையாடி 115 பந்துகளில் அதிரடியாக 119 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். ரூதர்போர்டு 82 பந்தில் 80 ரன்கள், குடகேஷ் மோட்டி 61 பந்தில் 50 ரன் எடுத்தார்கள். இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணி 36 ஓவர்களில் 189 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இலங்கை தரப்பில் ஹசரங்கா 4, தீக்சனா மற்றும் அசிதா பெர்னாடோ தலா 3 விக்கெட் வீழ்த்தினார்கள்.

- Advertisement -

தொடரைக் கைப்பற்றிய இலங்கை

இதைத் தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணி தொடக்க ஆட்டக்காரர்கள் அவிஷ்கா பெர்னாடோ 12 பந்தில் 9 ரன்கள், நிஷான் மதுஷ்கா 44 பந்தில் 38 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இதைத்தொடர்ந்து வந்த குசால் மெண்டிஸ் 13 பந்தில் 3 ரன்கள், சமர் விக்கிரமா 50 பந்தில் 38 ரன்கள் என வெளியேறினார்கள்.

இதையும் படிங்க : 140 ரன்.. ஆயுஸ் பதோனி அட்டகாசம்.. செமி பைனலில் கெத்தாக நுழைந்த இந்திய அணி.. ஒமான் அணி தோல்வி.. எமர்ஜிங் ஆசியா கப் 2024

இதைத்தொடர்ந்து பொறுப்புடன் விளையாடிய கேப்டன் சரித் அசலங்கா இறுதிவரை ஆட்டம் இழக்காமல் 61 பந்துகளில் ஏழு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 62 ரன்கள் எடுத்தார். இலங்கை அணி 38.2 ஓவரில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் எடுத்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் மூன்று கோட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளை வென்று தொடரையும் கைப்பற்றியது.

- Advertisement -