பங்களாதேஷ் ODI.. ஆப்கான் அணி அறிவிப்பு.. லோக்கல் அதிரடி மன்னனுக்கு வாய்ப்பு.. இளம் ஸ்டாருக்கு அழைப்பு

0
140
Afghanistan

பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான் அணிகள் யுஏஇ-ல் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கின்றன. இந்தத் தொடர் நவம்பர் 6, 9, 11 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

- Advertisement -

பங்களாதேஷ் அணிக்கான நெருக்கடி

பங்களாதேஷ் அணி பாகிஸ்தான் சென்று இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றி வரலாறு படைத்தது. ஆனால் இந்த மகிழ்ச்சியை அந்த அணியால் நீண்ட நாட்கள் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. இந்தியா வந்து டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களில் படுதோல்வி அடைந்து நாடு திரும்பியது.

இந்த நிலையில் தற்போது சொந்த நாட்டில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் தோல்வியை தவிர்க்க போராடிக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக அடுத்து எப்படியும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றிய ஆக வேண்டிய நெருக்கடிகள் இருக்கிறது.

- Advertisement -

ஆப்கானிஸ்தான் அணியில் அதிரடி மன்னனுக்கு அழைப்பு

தற்பொழுது இந்த தொடருக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் ஆப்கானிஸ்தான் அணியில் 23 வயதான இடதுகை அதிரடி வீரர் செடியுல்லாஹ் அடாலுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. தற்போது இவர் தனி ஒரு வீரராக ஆப்கானிஸ்தான் அணியை நடைபெற்றுக் கொண்டிருக்கும் எமர்ஜிங் ஆசியக் கோப்பை தொடரின் அரையிறுதிக்கு அழைத்துச் சென்று இருக்கிறார்.

மேலும் அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த அணியில் நூர் அகமதுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஹஸமதுல்லாஹ் ஷாகிதி கேப்டனாக தொடர்கிறார். ரஷித் கான், முகமது நபி, அசமத்துல்லா ஓமர்சாய் மற்றும் குர்பாஸ் போன்ற நட்சத்திர வீரர்கள் இடம் பெற்று இருக்கிறார்கள். அதே சமயத்தில் நட்சத்திர துவக்க ஆட்டக்காரர் இப்ராஹிம் ஜட்ரன் இடம் பெறவில்லை.

இதையும் படிங்க : வாஷிங்டன் சுந்தரை இதுக்காகவே கொண்டு வந்தேன்.. எங்க திட்டம் இதுதான் – கோச் கம்பீர் விளக்கம்

பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி :

ஹஷ்மத்துல்லா ஷாஹிடி (கே), ரஹ்மத் ஷா (து.கே), ரஹ்மானுல்லா குர்பாஸ் (வி.கீ), இக்ரம் அலிகில் (வி. கீ), அப்துல் மாலிக், ரியாஸ் ஹசன், செடிக்குல்லா அடல், தர்வீஷ் ரசூலி, அஸ்மத்துல்லா உமர்சாய், ரஹ்மத் நபி, குல்பதீன் நபி, கான், நங்யால் கரோட்டி, ஏஎம் கசன்பர், நூர் அஹ்மத், ஃபசல் ஹக் ஃபரூக்கி, பிலால் சாமி, நவீத் சத்ரான் மற்றும் ஃபரித் அஹ்மத் மாலிக்.

- Advertisement -