இங்கிலாந்து அணிக்கு எதிராக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற அதே விதத்தை தங்களது பழக்கமாக பாகிஸ்தான் மாற்றிக்கொள்ள கூடாது என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் கூறி இருக்கிறார்.
பாகிஸ்தான் அணி சொந்த நாட்டில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 152 ரன்கள் வித்தியாசத்தில் இன்று வெற்றி பெற்றது. 1348 நாட்களாக சொந்த மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றி பெறாமல் இருந்து வந்த பாகிஸ்தான் அணி, அந்த சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.
இரண்டு போட்டிக்கு ஒரே ஆடுகளம்
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் முல்தான் மைதானத்தில் விளையாடப்பட்டது. இரண்டாவது போட்டியும் இதே முல்தான் மைதானத்திலேயே விளையாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் முதல் டெஸ்ட் போட்டிக்கு பயன்படுத்தப்பட்ட அதே ஆடுகளம் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கும் பயன்படுத்தப்பட்டது. ஐசிசி விதியில் அவுட்ஃபீல்டு தரமாக இருந்தால் போதும், மற்றபடி ஒரே ஆடுகளம் பயன்படுத்தப்படுவது தவறு கிடையாது என்று இருக்கிறது. இருந்த போதிலும் அரிதான இந்த விஷயம் பலராலும் விமர்சிக்கப்படுகிறது.
இதே டெம்ப்ளேட் தவறானது
இது குறித்து பேசி இருக்கும் நாசர் ஹுசைன் கூறும்பொழுது “பாகிஸ்தான் அணியின் எதிர்கால கிரிக்கெட்டுக்கான டெம்ப்ளேட் இதுவாக நிச்சயம் இருக்கக் கூடாது முடியாது. அவர்கள் இதே போல இரண்டு டெஸ்ட் போட்டிகளை ஒரே ஆடு களத்தில் விளையாடக் கூடாது. அவர்கள் வெற்றிக்கான ஒரு சூத்திரத்தை தற்போது கண்டுபிடித்து இருந்தால் அதனுடன் அவர்கள் ஒட்டிக் கொள்ள வேண்டும். தற்போது இரண்டு சுழல் பந்துவீச்சாளர்களும் சிறப்பாக இருக்கிறார்கள். தேர்வாளர்களும் கேப்டனும் இந்த இருவருடன் ஒட்டிக் கொள்ள வேண்டும்”
இதையும் படிங்க : 379 ரன்.. சாய் சுதர்ஷன் இரட்டை சதம்.. வாஷிங்டன் சுந்தர் கலக்கல் பேட்டிங்.. தமிழக அணி ரஞ்சி டிராபியில் அபாரம்
“இந்த போட்டியில் இரண்டாவது நாளில்தான் ஆடுகளம் மாறியது. இரண்டாவது நாளில் டக்கெட் சிறப்பான முறையில் அதிரடியாக விளையாடி சதமதித்திருந்த போதும் கூட, பந்து பவுன்சர் ஆனது. மேலும் அவரது தோள்பட்டைகளையும் தாக்கியது. இரண்டாவது நாளில் இருந்துதான் சுழல் பந்துவீச்சின் ஆதிக்கம் வந்தது” என்று கூறியிருக்கிறார்.






