என்னால அந்த சிக்ஸர திரும்ப அடிக்க முடியுமான்னு தெரியல.. ஆனா அவங்க 2 பேர் முழு சுதந்திரம் தராங்க – ஹர்திக் பாண்டியா பேட்டி

0
765

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டியிலும் இந்திய அணியின் சிறப்பான ஆட்டத்தால் வெற்றி பெற்று சூரியகுமார் யாதவ் தலைமையில் டி20 தொடரை முழுமையாக கைப்பற்றியுள்ளது.

இந்த சூழ்நிலையில் மூன்றாவது போட்டிக்கு பிறகு அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இந்த வெற்றி குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

தொடர் நாயகன் விருது வென்ற ஹர்திக் பாண்டியா

டி20 தொடரை பொருத்தவரை இந்திய கிரிக்கெட் அணி ஆக்ரோஷமான அணுகுமுறையை வெளிப்படுத்தி வருகிறது. டி20 உலக கோப்பையில் இருந்து ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இந்திய அணி தற்போது ரோகித் சர்மா ஓய்வு பெற்ற பிறகும், அதே முறையிலான ஆட்ட பாணியை சூரியகுமார் யாதவ் தலைமையிலான அணியும் வெளிப்படுத்தி வருகிறது. வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டியிலும் அதிரடியாக விளையாடி வெற்றி பெற்ற இந்திய அணி மூன்றாவது போட்டியிலும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 20 ஓவர்களில் 297 ரன்கள் குவித்தது.

அதற்கு பின்னர் களமிறங்கிய வங்கதேச அணி இந்திய அணியின் அபாரமான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 133 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து மூன்றாவது போட்டியிலும் தோல்வியை சந்தித்துள்ளது. இந்த டி20 தொடரில் பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் என மூன்று துறைகளிலும் சிறப்பாக விளங்கிய ஹார்த்திக் பாண்டியா தொடர் நாயகன் விருதை வென்றிருக்கிறார். வெற்றிக்குப் பிறகு ஹர்திக் பாண்டியா இந்திய அணி குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

அந்த ஷாட் அடிக்கடி வராது

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “கேப்டன் மற்றும் பயிற்சியாளர் ஆகியோர் கொடுத்த சுதந்திரம் இந்திய அணிக்கு அற்புதமாக இருந்தது. இது விளையாடும் அனைத்து வீரர்களுக்கும் அப்படியே பிரதிபலிக்கிறது. இது எப்படி இருந்தாலும் நாளின் இறுதியில் நீங்கள் இந்த விளையாட்டை ரசிக்க முடிந்தால் உங்களிடம் இருந்து அதிகபட்சமாக செயல் திறன் வெளிப்படும். ட்ரெஸ்ஸிங் ரூமில் அற்புதமான சூழல் நிலவும் போது மேலும் எல்லாருடைய வெற்றியும் நீங்கள் அனுபவிக்கும் போது நீங்கள் மேலும் அணிக்காக எதையாவது செய்ய வேண்டும் என்று விரும்புவீர்கள்.

இதையும் படிங்க:என் டீம் கிட்ட நான் எதிர்பார்ப்பது இதுதான்.. 49 இல்ல 99 ரன்ல இருந்ததா தைரியமா இதை ட்ரை பண்ணனும் – இந்திய கேப்டன் பேட்டி

இந்த சூழ்நிலை உண்மையிலேயே அற்புதமாக இருக்கிறது. கடவுள் எனக்கு உதவ தயாராக இருக்கிறார். நல்ல நாட்கள் அல்லது கெட்ட நாட்கள் என்று எதுவாக இருந்தாலும் செயல் முறையில் எந்தவித மாற்றமும் நிகழாது. இது அப்படியே தொடர்ந்து மேற்கொண்டு செல்லும். எனது உடல் இப்போது நல்ல நிலையில் இருக்கிறது. கடைசி ஓவரில் ஷாட் ஓவர் கவரில் நான் அடித்த சிக்சர் (19.2வது ஓவரில்) அடிக்கடி வராது என்று நினைத்தேன். ஆனால் அந்த வகையான ஷாட்கள் நான் அடிக்கும் போது எனக்கு மிகுந்த நம்பிக்கை தருகிறது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -