பாக் தார் ரோடு பிட்ச்.. ஜெயிக்க வழி என்ன.. டெஸ்ட் கிரிக்கெட் அவ்வளவுதான் – அஸ்வின் பீட்டர்சன் விமர்சனம்

0
1399
Ashwin

தற்போது பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளம் குறித்து இந்திய அணியின் சுழல் பந்து வீச்சு நட்சத்திரம் ரவிச்சந்திரன் அஸ்வின் விமர்சனம் செய்திருக்கிறார்.

இங்கிலாந்து பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே பாகிஸ்தான் முல்தான் மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளம் குறித்து ஏற்கனவே இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தார் ரோடு என விமர்சனம் செய்திருந்தார்.

- Advertisement -

மழையாக பொழியும் ரன்கள்

இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில் அப்துல்லா ஷபிக், ஷான் மற்றும் ஆகா சல்மான் என மூன்று பேர் சதம் அடித்தார்கள். பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸில் 556 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.

இதைத் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி மூன்றாவது நாள் முடிவில் மூன்று விக்கெட் இழப்புக்கு 492 ரன்கள் எடுத்திருக்கிறது. மேலும் 64 ரன்கள் மட்டுமே தற்பொழுது பின்தங்கி இருக்கிறது. இங்கிலாந்து அணிக்கு ஜாக் கிரவுலி மற்றும் பென் டக்கெட் அரை சதம் அடித்தார்கள். ஜோரூட் மற்றும் ஹாரி புரூக் சதம் அடித்து ஆட்டம் இழக்காமல் களத்தில் நிற்கிறார்கள்.

- Advertisement -

அஸ்வின் மற்றும் பீட்டர்சன் விமர்சனம்

இந்த நிலையில் இந்த போட்டிக்கான ஆடுகளத்தில் வெற்றி குறித்து கருத்து தெரிவித்திருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது பதிவில் “இப்போதைக்கு மூன்றாவது இன்னிங்ஸ் விளையாடும் அணி மோசமாக விளையாடினால் மட்டுமே இந்தப் போட்டியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது” என்று கூறியிருக்கிறார். ஏற்கனவே அஸ்வின் இந்த போட்டி டிராவில் முடியும் என்று பேசி இருந்தார்.

இதையும் படிங்க : 101 ஓவரில் 492/3.. ரூட் புரூக் அதிரடி மெகா சாதனைகள்.. இங்கிலாந்திடம் சிக்கிய பாகிஸ்தான் அணி.. முதல் டெஸ்ட்

மேலும் இந்த போட்டிக்கான ஆடுகளம் குறித்து கடுமையான விமர்சனம் செய்திருக்கும் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் தனது பதிவில் கூறும் பொழுது “இந்த ஆடுகளம் பலர்களுக்கான இன்னொரு கல்லறை. இந்த ஆடுகளம் சிதைந்து கடைசி கட்டத்தில் பந்துவீச்சாளர்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்றால், இது டெஸ்ட் கிரிக்கெட்டை அழித்துவிடும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -