100 சதவீதம் உறுதியா சொல்றேன்.. ரோகித் ஓய்வு பெறுவது அந்த தொடருக்கு பின்தான் – அவரின் முன்னாள் கோச் பேட்டி

0
919

இந்திய மூன்று வடிவ தொடரிலும் முழு நேர கேப்டனாக திகழ்ந்த ரோகித் சர்மா சமீபத்தில் இந்திய அணி டி20 உலக கோப்பையை வென்றதைத் தொடர்ந்து டி20 ஃபார்மேட்டில் இருந்து மட்டும் தனது ஓய்வினை அறிவித்தார். மேலும் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடருக்கு கேப்டனாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் ரோகித் சர்மாவின் சிறு வயது பயிற்சியாளர், ரோகித் சர்மா டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர்களில் ஓய்வு பெறுவது குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

டி20 ஃபார்மெட்டில் இருந்து ஓய்வு

விராட் கோலிக்கு பிறகு இந்திய அணியின் முழு நேர கேப்டனாக செயல்பட்ட ரோகித் சர்மா கடந்தாண்டு நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டியில் இந்திய அணி எதிர்பாராத விதமாக ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வி அடைந்தது. அதற்குப் பிறகு இந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற்று வரலாறு படைத்ததோடு இந்திய டி20 அணியிலிருந்து ரோஹித் சர்மா தனது ஓய்வினை அறிவித்தார்.

தற்போது ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடரில் மட்டும் கவனத்தை செலுத்தி வரும் நிலையில் தற்போது ரோஹித் சர்மாவுக்கு 37 வயது ஆவதால் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரோடு ரோகித் சர்மா தனது ஓய்வினை அறிவிப்பார் என்றும் 2027 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒரு நாள் உலகக் கோப்பையில் ரோகித் சர்மா நிச்சயமாக விளையாடுவார் எனவும் அவரது சிறுவயது பயிற்சியாளரான தினேஷ் லாட் கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஒருநாள் உலகக் கோப்பை வெல்வதே முக்கியம்

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்குப் பிறகு ரோகித் சர்மா டெஸ்ட் தொடரில் தனது ஓய்வினை அறிவிப்பார் என்று கூறவில்லை. ஆனால் தற்போது அவருக்கு வயது அதிகரித்து வருவதால் டெஸ்ட் தொடரில் ஓய்வு பெறலாம் என்று தோன்றுகிறது. ஏனென்றால் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்காக தன்னை பிட் வைத்துக் கொள்வதற்கு கூட டெஸ்ட் தொடரில் ஓய்வு பெறலாம்.

இதையும் படிங்க:சூர்யா கம்பீர் செய்த தவறு.. பிட்ச் பத்தி தெரிஞ்சும் அடுத்த போட்டியில் இந்த மாதிரி பண்ணாதீங்க – பாசித் அலி கருத்து

இதனால் 2027ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒரு நாள் உலக கோப்பையில் ரோகித் சர்மா 100 சதவீதம் நிச்சயமாக விளையாடுவார் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும். ரோகித் சர்மா விளையாடும் ஒரு விதமான கிரிக்கெட் நம்ப முடியாத வகையில் இருக்கும்” என்று கூறியிருக்கிறார். டி20 உலக கோப்பையை வென்றது மகிழ்ச்சி அளித்தாலும் ஒரு நாள் உலகக் கோப்பையை வெல்வதே தனக்கு மிகவும் முக்கியம் என்று ரோகித் சர்மா சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இதனால் அடுத்த ஒரு நாள் உலகக் கோப்பையோடு ரோகித் சர்மா ஒரு நாள் தொடரிலும் ஓய்வு பெறுவார் என்று தெரிகிறது.

- Advertisement -