53 ஆண்டுகளில் முதல் முறை.. ரஷீத் கான் ஸ்பெஷல் சாதனை.. பும்ரா ஸ்டார்க் கூட செய்யாத விஷயம்

0
93
Mitchell Starc and rashid khan and Jasprit bumrah

நேற்று நடைபெற்ற ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி மிகப் பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒரு நாள் தொடரையும் கைப்பற்றி வரலாறு படைத்தது.

இந்த சூழ்நிலையில் ஆப்கானிஸ்தான் அணியின் முன்னணி சுழற் பந்துவீச்சாளர் ஆன ரஷித் கான் 53 வருட ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு சிறப்பான சாதனையை செய்திருக்கிறார்.

- Advertisement -

இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் தொடர் துபாயில் ஷார்ஜாவில் நடைபெற்று வரும் நிலையில் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி ஏற்கனவே வெற்றி பெற்றது. இந்த நிலையில் இரண்டு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் குர்பாஸ் 105 ரன்கள் குவித்து அசத்தினார்.

அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி ஆப்கானிஸ்தான் அணியின் அபாரமான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 34.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்கள் மட்டுமே குவித்து 177 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. மேலும் முதன்முறையாக தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ஆப்கானிஸ்தானை வெற்றி பெற்று வரலாறு படைத்திருக்கிறது.

- Advertisement -

இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்த சுழற் பந்துவீச்சாளர் ரஷீத் கான் அன்றைய தினத்தில் ஒன்பது ஓவர்கள் பந்து வீசி ஒரு ஓவர் மெய்டனுடன் 19 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஐந்து முக்கிய விக்கெட்டுகள் வீழ்த்தினார். அன்றைய தினத்தில் அவரது 26 ஆவது பிறந்த நாளையும் கொண்டாடி இருக்கிறார். இதன் மூலம் 53 ஆண்டுகால ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தனது பிறந்த நாளில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையையும் ரஷீத் கான் படைத்திருக்கிறார்.

இதற்கு முன்னதாக 2007ம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அணியை சேர்ந்த பிலாந்தர் அயர்லாந்து அணிக்கு எதிராக அவரது பிறந்தநாளில் 12 ரன்கள் விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். மேலும் 2010ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 4/44 என தனது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்திருக்கிறார். உலகின் முன்னணி பந்துவீச்சாளர்களாக கருதப்படும் பும்ரா, ஸ்டார்க் கம்மின்ஸ் ஆகியோர்களே இந்த சாதனை செய்யாத நிலையில் ரசீத் கான் வீழ்த்தி இருப்பது கிரிக்கெட் உலகில் கவனிக்கத்தக்க விஷயமாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:விராட் கோலி ஜோ ரூட் தாண்டி கில் புது சாதனை.. 8 இன்னிங்ஸ்களில் 5 பெரிய சம்பவங்கள்.. சேப்பாக்கில் கலக்கல்

இதன் மூலமாக ஆப்கானிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று ஒரு நாள் தொடரையும் கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -