தற்போது கர்நாடகாவில் நடைபெற்று வரும் மஹாராஜ் டி20 லீக் தொடரில் மைசூர் வாரியர்ஸ் அணிக்காக விளையாடும் விதவக பந்துவீச்சு ஆல் ரவுண்டர் மனோஜ் பாண்டேஜ்விளையாடி வருகிறார். இந்த நிலையில் இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் அவருக்கு விளையாட வாய்ப்பு கொடுக்காமல் ஆர்சிபி அணி கிரிக்கெட் வாழ்க்கையை வீணடித்து விட்டதாக இந்திய முன்னாள் வீரர் தோட்டா கணேஷ் விமர்சனம் செய்திருக்கிறார்.
25 வயதான மனோஜ் பாண்டேஜ் வலதுகை மிதவேகப் பந்துவீச்சாளர். அதே சமயத்தில் இடது கை பேட்ஸ்மேன் ஆக இருக்கிறார். கடந்த வருடம் முதலே அதிரடியாக விளையாடும் இவருக்கு ஆர்சிபி அணியில் பிளேயிங் லெவனில் விளையாடுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அடிப்படை விலையான இருபது லட்ச ரூபாய்க்கு மனோஜ் பாண்டேஜை ஆர்சிபி அணி 2023 ஆம் ஆண்டு வாங்கியது. ஆனால் இரண்டு ஆண்டுகளாகவுமே பெஞ்சில் அமர வைத்து வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. வளர வேண்டிய இளம் வீரருக்கு இது பெரிய பின்னடைவாக அமைந்தது. இந்த நிலையில் தற்போது மகாராஜா டி20 லிட்டில் முதல் போட்டியில் 16 பந்தில் 42 ரன், இரண்டாவது போட்டியில் ஆட்டம் இழக்காமல் 33 பந்தில் 58 ரன் எடுத்து அனைவரது கவனத்தையும் திருப்பி இருக்கிறார்.
இதனால் கர்நாடக மாநில அணிக்காகவும் இந்திய அணிக்காகவும் விளையாடி உள்ள முன்னாள் வீரர் டோட்டா கணேஷ் கூறும் பொழுது “இந்தியத் தேர்வாளர்கள் மிதவேக பந்துவீச்சு அதிரடி வீரரை தேடினால், கர்நாடக மாநிலம் ராய்ச்சூரை சேர்ந்த 25 வயது வலதுகை மிதவேக பந்துவீச்சாளர் மற்றும் இடதுகை பேட்ஸ்மேன் மனோஜ் பாண்டியன் சிறந்த தேர்வாக இருப்பார். அவர் தன்னுடைய பெரிய ஷாட்களை ரிங்கு சிங் போல மிகச் சரியாக மாற்றுகிறார். மேலும் ஒரு ஓவரை திட்டமிட்டு அவருக்கு அடிக்கவும் தெரியும்.
நான் ஐபிஎல் தொடரில் இரண்டு சீசன்களாக அவரைப் பற்றி பேசி வருகிறேன். ஆனால் ஆர்சிபி அணி நிர்வாகம் கடந்த இரண்டு சீசன்களாக அவரை பெஞ்சில் அமர வைத்து வருகிறது. இம்பேக்ட் பிளேயர் ஆக கூட ஒரு வாய்ப்பையும் கொடுக்கவில்லை. மனோஜ் பாண்டேஜ் கிளீன் ஸ்ட்ரைக்கர்களில் ஒருவர். தற்போது மகாராஜா டி20 லீக்கில் அவரை பார்த்து ஏதாவது அணிகள் ஐபிஎல் தொடரில் வாய்ப்பு தரும் என்று நினைக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : 41 ரன் 4 விக்கெட்.. நூலிழையில் தவறிய வெற்றி.. வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா.. டெஸ்ட் தொடரை வென்றது
ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இவரைப் போன்ற மிதவேகப்பந்துவீச்சு ஆல் ரவுண்டர் நிதீஷ் குமார் ரெட்டிக்கு உடனடியாக வாய்ப்பு கொடுத்து இருந்தது. இதன் காரணமாக அவர் ஜிம்பாப்வே தொடரில் இந்திய அணிக்கும் தேர்வாகி இருந்தார். ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்று வீரரை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் வேகமாக பலரை வைத்து சோதித்து வருகிறது. இந்த நிலையில் ஆர்சிபி அணி இவருக்கு வாய்ப்பு கொடுத்து வெளியில் காட்டி இருந்தால், இவருக்கும் தற்போது பெரிய வெளிச்சம் கிடைத்திருக்கும்!






