290 ரன்.. மீண்டும் காப்பாற்றிய இந்திய ஆஸி பார்ட்னர்ஷிப்.. ரகானே அணி செமி பைனலுக்கு தகுதி

0
9556
Rahane

தற்போது இங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட்டில் 50 ஓவர்கள் வடிவில் ஒன் டே கப் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற கால் இறுதி போட்டியில் ரகானே இடம்பெற்றிருக்கும் அணி அவரது சிறப்பான ஆட்டத்தால் அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

ஹேம்ப்ஷைர் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற லெய்செஸ்டர்ஷைர் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஹேம்ப்ஷைர் அணியின் துவக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான மிடில்டன் 28 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

அதே சமயத்தில் இன்னொரு துவக்க ஆட்டக்காரரும் அணியின் கேப்டனுமான குப்பின்ஸ் அபாரமாக விளையாடி சதம் அடித்து 139 பந்துகளில் 136 ரன்கள் குவித்தார். இவருக்கு அடுத்தபடியாக லியாம் டவ்சன் 51 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் டோம்னிக் கெல்லி அதிரடியாக 20 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். இறுதியாக ஹேம்ப்ஷைர் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் குவித்தது. டாம் ஸ்க்ரீவன் மூன்று விக்கெட் கைப்பற்றினார்.

பெரிய இலக்கை நோக்கி விளையாடிய லெய்செஸ்டர்ஷைர் அடி முப்பது ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியில் சிக்கியது. இதற்கு அடுத்து இந்தியாவின் அஜிங்கியா ரகானே மற்றும் ஆஸ்திரேலியாவின் பீட்டர் ஹேன்ட்ஸ்காம்ப் இருவரும் ஜோடி சேர்ந்து அணியை மெல்ல மெல்ல மீட்டெடுக்க ஆரம்பித்தார்கள்.

- Advertisement -

சிறப்பாக விளையாடிய இந்த ஜோடியில் இருவரும் அரை சதம் கடந்தார்கள். இந்த ஜோடி 117 பந்துகளில் 128 ரன்கள் சேர்த்தது. அஜிங்கியா ரகானே 86 பந்துகளில் 70 ரன்கள், பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் அதிரடியாக 53 பந்துகளில் 74 ரன்கள் எடுத்தார்கள்.

இதற்கு அடுத்து கடைசிக் கட்டத்தில் காக்ஸ் 50 பந்தில் 45 ரன்கள், டிரிவாஸ்கிஸ் ஆட்டம் இழக்காமல் 55 பந்தில் 60 ரன்கள் எடுக்க, 49.5 ஓவரில் ஏழு விக்கெட் இழப்புக்கு இழப்பை எட்டி, மூன்று விக்கெட் வித்தியாசத்தில் ஹேம்ப்ஷைர் அணியை தோற்கடித்து, லெய்செஸ்டர்ஷைர் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்று இருக்கிறது.

இதையும் படிங்க : வெறும் 4 பந்து.. தனி ஆளாக ஆசிய சாம்பியனை தோற்கடித்த அயர்லாந்து வீராங்கனை.. இலங்கை மகளிர் அணி வரலாற்று தோல்வி

இந்த தொடர் முழுக்க இந்திய வீரர் அஜின்கியா ரகானேவின் ஆட்டம் மிகச் சிறப்பாக இருந்து வருகிறது. மேலும் மிடில் வரிசையில் இவருடன் இணைந்து ஆஸ்திரேலியாவின் பீட்டர் ஹேன்ட்ஸ்காம்ப் அதிரடியான பார்ட்னர்ஷிப் அமைத்து வருகிறார். இந்த ஜோடியின் தனிப்பட்ட ஆட்டம் அவர்களது அணியை தற்போது அரையிறுதிக்கு கொண்டு வந்திருக்கிறது.

- Advertisement -