தமிழ்நாட்டில் நடைபெறும் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் போன்று டெல்லியில் டெல்லி பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் வருகிற ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் செப்டம்பர் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சமீபத்தில் டெல்லி பிரிமியர் கிரிக்கெட் லீக்கின் பிராண்ட் தூதராக வீரேந்திர சேவாக்கை அறிவித்ததோடு இதில் பங்குபெறும் ஆறு அணிகளின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.
இந்த பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ரிஷப் பண்ட், ஹர்சித்ரானா, இசாந்த் சர்மா, சிஎஸ்கே வீரரான சிமர்ஜித் சிங் போன்ற முன்னணி வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்க இருக்கின்றனர்.
முன்னணி வீரர்கள் பங்கேற்கும் இந்த டெல்லி பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் மொத்தமாக ஆடவர் பிரிவில் 40 போட்டிகளும் மகளிர் பிரிவில் 7 போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்தப் போட்டிகள் அனைத்தும் ஆகஸ்ட் 17ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 8ஆம் தேதி வரை நடைபெறும் என்று டெல்லி மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொடரின் அனைத்து போட்டிகளும் புதுடெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் மொத்தமாக ஆறு ஆண்கள் அணியும் மற்றும் நான்கு பெண்கள் அணிகள் பங்கேற்க உள்ளன. தெற்கு டெல்லி சூப்பர் ஸ்டார்கள், கிழக்கு டெல்லி ரைடர்ஸ், மத்திய டெல்லி கிங்ஸ், வடக்கு டெல்லி ஸ்ட்ரைக்கர்ஸ், மேற்கு டெல்லி சிங்கங்கள், பழைய டெல்லி 6 என ஆறு அணிகள் பங்கேற்க உள்ளன.
தெற்கு டெல்லி சூப்பர் ஸ்டார் அணியில் குல்தீப் யாதவ் மற்றும் ஆயுஸ் பதோணி கிழக்கு டில்லி ரைடர்ஸ் அணியில் அனுஜ் ராவத், வடக்கு டெல்லி ஸ்ட்ரைக்கர்ஸ் அணியில் ஹர்ஷித் ரானா, பழைய டெல்லி சிக்ஸ் அணியில் இசாந்த் சர்மா மற்றும் ரிஷப் பண்ட் போன்ற நட்சத்திர வீரர்கள் இருப்பதால் இந்த தொடர் ரசிகர்களுக்கு நிச்சயம் சுவாரசியம் அளிக்கக் கூடிய வகையில் இருக்கும்.
இதன் முதல் போட்டி பூரணி டெல்லி மற்றும் தெற்கு டெல்லி ஸ்ட்ரைக்கர்ஸ் அணிகளுக்கு இடையே இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது. இதன் கடைசி லீக் போட்டி செப்டம்பர் 5ஆம் தேதியோடு முடிவடைகிறது. இந்தப் போட்டிகள் அனைத்தும் தொலைக்காட்சியில் ஸ்போர்ட்ஸ் 18 சேனலிலும் இணையதளத்தில் ஜியோ சினிமா ஆப்பிலும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
இதையும் படிங்க:கில்லெஸ்பி உங்க ஆஸி வேலை பாகிஸ்தான் டீம்க்கு தேவையில்ல.. இத பண்ணுங்க – பாக் பசித் அலி அறிவுரை
செப்டம்பர் 5ஆம் தேதி தெற்கு டெல்லி சூப்பர் ஸ்டார் மற்றும் கிழக்கு டெல்லி ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே கடைசி லீக் போட்டி நடைபெற உள்ளது. இதன் குவாலிபயர் போட்டிகளுக்குப் பிறகு இறுதிப்போட்டி 8ம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தொடர் குறித்து தெற்கு டெல்லி சூப்பர் ஸ்டார் அணியின் ஆயுஸ் பதோனி இதனை ஒரு மினி ஐபிஎல் தொடர் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.






