பாபர் அசாம் கடைசி.. தனது டாப் 5 பேட்ஸ்மேன்களை தேர்வு செய்த அடில் ரசித்.. முதலிடத்தில் இந்திய வீரர்

0
1903

இங்கிலாந்தில் தற்போது 100 பந்துகள் கொண்ட கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் டி20யின் நம்பர் ஒன் பந்து வீச்சாளரான இங்கிலாந்தின் அடில் ரஷீத் இந்தத் தொடரில் நார்த்தன் சூப்பர் சார்ஜஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

போட்டியின் நடுவே செய்தியாளர் உடன் கலகலப்பான சந்திப்பில் ஈடுபட்ட அடில் ரஷீத் டாப் 5 சிறந்த பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்களை தரவரிசை படுத்தி இருக்கிறார்.

- Advertisement -

பார்வையாளர்களை கவரும் விதமாக டி20 கிரிக்கெட்டை மேலும் குறுகிய வடிவத்தில் 100 பந்துகள் கொண்ட போட்டி தொடர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. எட்டு அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில் நார்த்தன் சூப்பர் சார்ஜஸ் அணிக்காக டி20யின் நம்பர் ஒன் பந்துவீச்சாளரான அடில் ரசித் தற்போது விளையாடி வருகிறார். அடில் ரசித் 7.80 என்கிற எக்கானமி ரேட்டில் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார்.

இவர் பங்கு பெற்ற விளையாடி வரும் நார்த்தன் அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி மூன்று போட்டிகளில் வெற்றியும் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்து 6 புள்ளிகளுடன் தற்போது ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில்போட்டிக்குப் பிறகு ஏற்பட்ட செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர் ஐந்து பேட்ஸ்மேன்களின் மற்றும் பந்துவீச்சாளர்களின் பெயரைக் கொடுத்து அதை தரவரிசைப்படுத்துமாறு அடில் ரசித்திடம் கேட்டதற்கு அடில் ரஷீத் கிரிக்கெட்டில் டாப் 5 சிறந்த பேட்ஸ்மேன்கள் மற்றும் ஐந்து பந்துவீச்சாளர்களை தேர்ந்தெடுத்திருக்கிறார்.

- Advertisement -

இதில் ஒரு நாள் தரவரிசையில் தற்போது நம்பர் ஒன் வீரராக இருக்கும் பாபர் அசாமுக்கு ஐந்தாவது இடத்தையும், இந்தியாவின் ஜாம்பவான் விராட் கோலிக்கு முதல் இடத்தையும் கொடுத்திருக்கிறார். அவரது சிறந்த பேட்மின்கள் தர வரிசையில் முதலிடத்தில் விராட் கோலி, இரண்டாவது இடத்தில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட், மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் நான்காவது இடத்தில் நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் மற்றும் கடைசி இடத்தில் பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் இருக்கிறார்.

அதுவே பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா முதலிடத்திலும், இங்கிலாந்து அணியின் ஆர்ச்சர் இரண்டாவது இடத்திலும், நியூசிலாந்து அணியின் டிரென்ட் போல்ட் மூன்றாவது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் மிச்சல் மார்ஸ் நான்காவது இடத்தையும் பிடித்தார். பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர் சாஹின் ஷா அப்ரிடி இதில் ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:3 போட்டி 157 ரன்.. இருந்தும் சச்சினின் மோசமான சாதனை பட்டியலில் இணைந்த ரோஹித் சர்மா.. நல்லா விளையாடியும் இப்படி ஆயிருச்சே

இந்தியாவின் பேட்ஸ்மேன் மற்றும் பந்து வீச்சாளர்கள் நம்பர் ஒன் இடத்தில் இருக்க, பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சாளர் இருவரும் இவரது வரிசையில் கடைசி இடத்தை பிடித்திருக்கின்றனர்.

- Advertisement -