இன்னும் 2 சிக்ஸ்.. கெய்லின் இமாலய சாதனையை முறியடிக்க போகும் ரோகித்.. தோனியை விட 101 அதிகம்

0
380

இந்திய அணி தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இந்திய அணி ஒரு போட்டி டிரா, ஒரு போட்டி தோல்வி என விளையாடி வந்தாலும் கேப்டன் ரோஹித் சர்மா சிறந்த முறையில் தனது பேட்டிங் பங்களிப்பை வழங்கி வருகிறார்.

ஒரு நாள் போட்டிகளில் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் ரோகித் சர்மா வெஸ்ட் இண்டீஸ் அதிரடி ஜாம்பவான் கெயிலின் சாதனையை முறியடிக்க இன்னும் இரண்டு சிக்ஸர்கள் மட்டுமே தேவை. மேலும் தோனியை விட 101 சிக்ஸர்கள் அடித்து முன்னிலையில் இருக்கிறார்.

- Advertisement -

இந்தியாவின் அதிரடி தொடக்க ஆட்டக்காரராக திகழ்ந்த வீரேந்திர சேவாக்கின் பாணியில் தற்போது ரோகித் சர்மா தனது அதிரடியான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகிறார். ரோஹித் சர்மா தொடக்கத்தில் இந்திய அணியில் இது போன்ற ஆட்ட முறையை வெளிப்படுத்தினாலும் 2022ஆம் ஆண்டு டி20 உலக கோப்பைக்கு முன்பாக மெதுவான தொடக்கத்தையே வெளிப்படுத்தி வந்தார்.

டி20 உலக கோப்பை தோல்விக்கு பிறகு முற்றிலுமாக தனது ஆட்ட பாணியை மாற்றிய ரோகித் சர்மா ஆட்டத்தின் முதல் பந்தில் இருந்தே அதிரடியாக ஆடும் ஆட்டம் முறைக்கு மாறினார். ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி குறைந்த ஓப்பர்களிலேயே அதிக ரன்களை குவித்து விட்டு செல்வதால் இவருக்கு பின்னால் வருகிற பேட்ஸ்மேன்கள் அனைவருமே எந்த சிரமமும் இன்றி எளிதாக விளையாடுகிறார்கள்.

- Advertisement -

இதன் காரணமாகவே சமீபத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பையை வெல்ல இந்திய அணி முக்கிய காரணமாக அமைந்தது. தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவதன் மூலமாக ரோகித் சர்மா சிக்ஸர்களை பறக்கவிட்டு சாதனைகளையும் நிகழ்த்தி வருகிறார். இதுவரை 264 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா ஒரு நாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்களின் பட்டியலில் 330 சிக்சர்கள் மூலம் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

331 சிக்ஸர்களை பறக்க விட்ட வெஸ்ட் இண்டீஸ் அதிரடி மன்னன் கிறிஸ் கெயில் 301 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியிருப்பதன் மூலம் இந்த சாதனையை நிகழ்த்தி இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இவரை சாதனையை மிஞ்ச ரோகித் சர்மாவுக்கு இன்னும் இரண்டு சிக்ஸர்கள் மட்டுமே தேவை. மேலும் இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி மீதம் இருப்பதால் இந்த சாதனையை அடுத்த போட்டியிலேயே கடப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:பாகிஸ்தான் வீரர்களளே ஒத்துக் கொள்வதில்லை.. ஆனால் பாபர் அசாம் கோலி போன்றவர்தான் – ஆஸி உஸ்மான் கவாஜா பேட்டி

இதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனி 229 சிக்ஸர்கள் குவித்து இந்தப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார். அவரை விட ரோஹித் சர்மா 101 சிக்ஸர்கள் முன்னணியில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் இடத்தில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அப்ரிடி 351 சிக்ஸர்கள் குவித்து முதல் இடத்தில் இருக்கிறார்.

- Advertisement -