இந்தியாவில் மார்ச் ஏப்ரல் மாதங்களில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து கடந்த 2023ஆம் ஆண்டு பெண்களுக்கு என்று தனியாக பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் கொண்டுவரப்பட்டது.
இதுவும் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்று இரண்டு சீசன்களும் நடைபெற்று உள்ளது. இந்த நிலையில் சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தியாக புதிய அறிவிப்பு ஒன்று வெளிவந்துள்ளது.
இந்தியாவில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற பிரீமியர் லீக் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வெற்றிகரமாக 17 வருடங்கள் நடைபெற்றுள்ள நிலையில் கடந்த 2023ம் ஆண்டு பெண்களுக்கு என்று தனியாக பிரிமியர் லீக் தொடர் தொடங்கியது. இதில் டெல்லி மும்பை, பெங்களூர், உத்தர பிரதேஷ் மற்றும் குஜராத் அணிகள் புதிதாக தொடங்கப்பட்டன. இதில் முதல் சீசனில் மும்பை அணியும் இரண்டாவது சீசனில் பெங்களூர் அணியும் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளன.
ஆண்கள் ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் கோப்பை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை போன்று சிஎஸ்கே பெண்கள் அணி இல்லை என்று ரசிகர்களிடையே மிகப்பெரிய வருத்தம் இருந்தது. தற்போது அந்த வருத்தத்தை போக்கும் விதமாக விரைவில் பெண்கள் சிஎஸ்கே அணி வருகிறது என்றும் அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆங்கில பத்திரிகையான எக்கனாமிக் டைம்ஸ் பத்திரிக்கையில் வெளிவந்துள்ள தகவலின் படி, இந்தியா சிமெண்ட்சின் விளையாட்டு பிரிவு சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் உடன் இணைக்கப்பட உள்ளது. இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ ஆன ஸ்ரீனிவாசன் அவர்களின் உடல்நிலை கருத்தில் கொண்டு அவரது மகள் ரூபா குருநாத் விரைவில் இதன் தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.
இந்த சூழ்நிலையில் ரூபா குருநாத் மகளிர் பிரிமியர் லீக் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளே நுழைவதற்கான படிநிலைகளை ஆராய்ந்து வருவதாகவும், பொருளாதார ரீதியாக மகளிர் சிஎஸ்கே அணி பங்கு பெற எந்த அளவிற்கு சாத்தியம் என்றும் மற்றும் மற்ற பெண்கள் அணிகளின் நிதி நம்பகத்தன்மை மற்றும் அனுபவத்தையும் ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது. ரூபா குருநாத் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்ற பிறகு பெண்கள் சிஎஸ்கே அணி ஐபிஎல் தொடரில் பங்கு பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வார்.
இதையும் படிங்க:கில் நினைக்கிறது ஒன்னு நடக்கிறது ஒன்னு.. குல்தீப் யாதவ் அதுக்கும் மேல – ஆகாஷ் சோப்ரா விமர்சனம்
சமீபத்தில் வெளிவந்துள்ள அறிக்கையின் படி 231 மில்லியன் அமெரிக்க டாலர்களுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மதிப்பு மிக்க பொருளாதார அணியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி மாணவர்களுக்கான பயிற்சி அகாடமிகளை அதிகரிக்கவும், வருவாயை அதிகரிக்கவும் சிஎஸ்கே திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் முன்னால் சிஎஸ்கே வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் விரைவில் இந்திய சிமெண்ட் நிறுவனத்தில் முக்கிய பதவி வகிப்பார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.






