2019 உலகக்கோப்பை.. என் மனது வலித்த தருணம் அது.. நான் இதை செய்யாதனாலதான் மீண்டு வர முடிஞ்சது – தோனி பேட்டி

0
1278

இந்திய கிரிக்கெட்டின் வெற்றிகரமான கேப்டன் ஆன மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று தற்போது ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடிக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தொகுதி 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை குறித்து முதல் முறையாக மனம் திறந்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

2011ம் ஆண்டு ஒரு கேப்டனாக ஒரு நாள் உலகக் கோப்பையை வென்று கொடுத்த மகேந்திர சிங் தோனி, அதற்குப் பிறகு 2015ம் ஆண்டும் கேப்டனாக பொறுப்பேற்று இந்திய அணியை அரையிறுதி வரை கொண்டு வந்தார். இருப்பினும் அரை இறுதியில் ஆஸ்திரேலியா அணியிடம் ஏற்பட்ட தோல்வியின் காரணமாக உலகக்கோப்பை தொடரிலிருந்து இந்தியா வெளியேறியது.

அதன் பிறகு தனது கேப்டன் பொறுப்பை விட்டு விலகிய தோனி விராட் கோலியின் தலைமையில் 2019ஆம் ஆண்டு ஒரு நாள் உலகக் கோப்பையில் விளையாடினார். அந்தத் தொடரிலும் அரை இறுதி வரை வந்த இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் இறுதிப் போட்டியில் தோற்றது. இருப்பினும் மகேந்திர சிங் தோனி அரை இறுதியில் தொடர்ந்து போராடியதால் கடைசி வாய்ப்பாக இருந்த ஒரு நம்பிக்கை அவர் ஆட்டமிழந்து வெளியேறியதும் முற்றிலும் தகர்ந்தது.

- Advertisement -

மேலும் நியூசிலாந்து அணியுடன் நடந்த அரையிறுதி போட்டியில் முதல் நாள் பெய்த மழை காரணமாக போட்டி அடுத்த நாளுக்கு மாற்றப்பட, இந்திய அணியின் செயல் திறனும் அங்கு பாதிக்கப்பட்டது ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மகேந்திர சிங் தோனி 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தோல்வி இதயம் உடைந்த ஒரு தருணமாக இருந்தது என்று கூறி இருக்கிறார்.

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “அந்த சூழ்நிலை கடினமான ஒன்றாக இருந்தது. ஏனென்றால் நான் விளையாட போகும் கடைசி உலக கோப்பை என்று அது நன்றாக தெரியும். இருப்பினும் அந்தத் தொடரில் வெற்றி பெற்றிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருப்போம். அது மனது வலித்த தருணமாக அமைந்தது. இருப்பினும் வேறு வழியில்லை முடிவை ஏற்றுக் கொண்டு அதிலிருந்து முன்னேறித்தான் ஆக வேண்டும்.

இதையும் படிங்க:இலங்கை ODI: நாளை உத்தேச இந்திய பிளேயிங் XI.. 5 பேரில் யாருக்கு வாய்ப்பு?.. சர்ப்ரைஸ் மாற்றங்கள்

அந்த நிகழ்வு மனதில் இருந்து வெளியேற சிறிது நேரம் எடுக்கும். ஒருவருக்கு சிறிது இடைவெளி தேவைப்படும். நான் அதற்குப் பிறகு எந்த ஒரு சர்வதேச போட்டிகளிலும் விளையாடாததால் அதிலிருந்து மீண்டு வர எனக்கு அதிக நேரம் கிடைத்தது. அது மிகவும் மன வேதனையாக இருந்தது. ஆனால் அதே நேரத்தில் நீங்கள் அதிலிருந்து வெளியே வந்தாக வேண்டும். நீங்கள் உங்களால் முடிந்தவரை முயற்சித்தீர்கள். ஆனாலும் வெற்றி பெற முடியவில்லை எனவே வெளியே வருவது நல்லது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -