நேற்று இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் மூன்றாவது போட்டியில் நடைபெற்றது. வேறு எளிதாக வெல்லும் நிலையில் இருந்த இலங்கை அணியை பரபரப்பான போட்டியில் வீழ்த்தி இந்திய அணி தொடரை முழுமையாகக் கைப்பற்றியது. இந்த நிலையில் இந்திய டி20 அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா இந்திய டி20 அணிக்கு வாழ்த்து செய்தி அனுப்பி இருக்கிறார்.
இந்தத் தொடருக்கு சூரியகுமார் யாதவ் புதிய கேப்டன் ஆகவும், புதிய தலைமை பயிற்சியாளராக அறிவிக்கப்பட்ட கௌதம் கம்பீருக்கு முதல் தொடராகவும் இது அமைந்தது. எனவே இருவரும் பொறுப்பில் எப்படி செயல்படுவார்கள் என்பது குறித்தான எதிர்பார்ப்பு இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிக அதிகமாக இருந்தது.
இந்த நிலையில் வழக்கம் போல் சூரியகுமார் யாதவுக்கு கேப்டன் பொறுப்பு பேட்டிங்கை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. மேலும் களத்திலும் மிகச் சிறப்பான முறையில் வீரர்களை ஒருங்கிணைத்து மகிழ்ச்சியோடு வழி நடத்தி இருந்தார். அவரது தலைமையின் கீழ் வீரர்கள் மிகவும் மகிழ்ச்சியோடு விளையாடியதை களத்தில் பார்க்க முடிந்தது.
மேலும் கம்பீர் தனது வழக்கமான இறுக்கத்தை தவிர்த்து சிரிக்கவும் கூட செய்து இருந்தார். மேலும் ஆடுகளம் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்த நிலையில், முதல் போட்டியில் கடைசிக் கட்டத்தில் ரியான் பராக், இரண்டாவது போட்டியில் ரவி பிஸ்னாய், மூன்றாவது போட்டியில் ரிங்கு சிங்கை கொண்டு வந்ததோடு தானும் இருபதாவது ஓவ்ரை வீசி, ஆன்-ஃபீல்டு கேப்டன்ஷியில் பல ஆச்சரியங்களை சூரியகுமார் யாதவ் ஏற்படுத்தினார்.
நேற்றைய போட்டியில் 12 பந்துகளுக்கு ஒன்பது ரன்கள் தேவை என்ற நிலையில் இலங்கை அணி இடம் ஆறு விக்கெட்டுகள் கைவசம் இருந்தது. இந்த நிலையில் ரிங்கு சிங்குக்கு 19 ஆவது ஓவரை கொடுத்தார். இதற்கடுத்து இருபதாவது ஓவரின் சிராஜ் வீசுவார் என எதிர்பார்த்து இருக்க தானே வந்து வீசினார். இந்த இரண்டு ஓவர்களிலும் சேர்த்து மொத்தமாக எட்டு ரன்கள் மட்டும் கொடுக்கப்பட்டு நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டு போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. இதில் இந்திய அணி வெகு எளிதாக வெற்றி பெற்றது.
இதையும் படிங்க : செம்மையா முடிச்சிங்க பசங்களா.. சூரியகுமார் டீமுக்கு ரோகித் சர்மா ஸ்பெஷல் மெசேஜ்.. கலக்கல் பர்பார்ம்
இந்த நிலையில் தொடரை முழுமையாக கைப்பற்றி இருக்கும் இந்திய அணிக்கு ரோகித் சர்மா தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில் “மிகச் சரியான சிறப்பான தொடக்கம்! அருமையா முடிச்சிங்க டீம் இந்தியா!” எனக் கூறியிருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய டி20 அணியின் அணுகுமுறையை மாற்றி, தற்பொழுது இந்திய அணி t20 கிரிக்கெட்டில் உலக சாம்பியனாக இருப்பதற்கு மிக முக்கியமான காரணம் ரோஹித் சர்மா ஆவார். தான் இல்லாத நிலையில் தான் உருவாக்கிய அணி சிறப்பாக விளையாடுவது மகிழ்ச்சியை உண்டாக்கி இருக்கிறது!






