பிசிசிஐ பாணியில்.. பெரிய பரிசுத்தொகையை அறிவித்த இலங்கை கிரிக்கெட்.. மகளிர் ஆசிய கோப்பை 2024

0
150

இலங்கையில் நடைபெற்ற மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் இந்திய அணியை வீழ்த்தி வரலாறு படைத்தது.

இலங்கை அணியின் வெற்றியை கொண்டாடும் வகையில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் பெரிய பரிசுத்தொகையை இலங்கை மகளிர் அணிக்கு பரிசாக வழங்கியிருக்கிறது.

- Advertisement -

ஆசிய நாடுகளின் சாம்பியனை நிர்ணயிக்கப் போகும் மகளிர்க்காண ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் மொத்தமாக எட்டு அணிகள் பங்கேற்று இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றின் முடிவில் அரையிறுதிக்கு பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை மற்றும் இந்திய அணிகள் தகுதி பெற்றன. முதல் போட்டியில் இந்திய அணி வங்கதேச அணியை வீழ்த்தியது.

இரண்டாவது அரையிறுதி போட்டியில் இலங்கை அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் குவிக்க, அதற்கு பின்னர் களம் இறங்கி விளையாடிய இலங்கை அணி 18.4 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. இலங்கை அணியின் கேப்டன் அத்தப்பத்து சிறப்பாக விளையாடி 61 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

இதன் மூலம் இலங்கையை கிரிக்கெட் அணி முதன் முறையாக ஆசிய கோப்பை மகளிர் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் இலங்கையை கிரிக்கெட் வாரியம் மகளிர் அணிக்கு 5 லட்சம் அமெரிக்க டாலர்கள் அதாவது 4 கோடியே 15 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையாக அறிவித்திருக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பிசிசிஐ 125 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் தனது சமூக வலைதளத்தில் “ஆசிய கோப்பை 2024 சிறப்பாக செயல்பட்ட மகளிர் இலங்கை கிரிக்கெட் அணியின் அற்புதமான வெற்றியை கொண்டாடும் வகையில் இலங்கை கிரிக்கெட் வாரியம் 5 லட்சம் அமெரிக்க டாலர்களை பரிசாக வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறது. உங்கள் அர்ப்பணிப்பு, வெற்றிக்காக போராடிய மனப்பான்மை, குழுவாக செயல்பட்ட விதம் ஆகியவை நமது தேசத்திற்கு மகத்தான பெருமையை கொண்டு வந்துள்ளன.

இதையும் படிங்க:எனக்கு புரியல.. ஐபிஎல்க்கு ஒரு நியாயம்.. உங்க நாடு இலங்கைக்கு ஒரு நியாயமா.. ஹசரங்கா மீது கம்ரான் அக்மல் விமர்சனம்

இது வெறும் ஆரம்பம் மட்டுமே. இனி வரும் காலங்களில் இதே போல மனத்தான வெற்றிகளை கொண்டாடுவோம்” என்று செய்தி வெளியிட்டிருக்கிறது. ஒரு பக்கம் ஆண்கள் கிரிக்கெட் அணி தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில் மறுபுறம் பெண்கள் கிரிக்கெட் அணி சாதித்து வருவது இலங்கை கிரிக்கெட்டுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

- Advertisement -