சூர்யா இவங்களோட கேப்டனாதான் இருந்தார்.. ஆனா உடனே எதையும் சொல்லிட முடியாது – அக்சர் படேல் பேச்சு

0
283
Surya

சில நாட்களுக்கு முன்பு இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக சூரியகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டார். சூரியகுமார் யாதவ் கேப்டனாக எப்படி செயல்படக் கூடியவர் என்று தற்பொழுது அக்சர் படேல் பேசியிருக்கிறார்.

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருந்தார். எனவே ரோகித் சர்மா டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அவரே புதிய கேப்டனாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இப்படியான நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் சூரியகுமார் யாதவை இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக நியமித்தது.

- Advertisement -

மேலும் இந்திய அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் கொண்டுவரப்பட்டிருக்கிறார். புதிய கேப்டன் மற்றும் புதிய பயிற்சியாளர் எப்படி இருப்பார்கள்? இவர்களுடன் வேலை செய்யும் அனுபவம் எப்படி ஆனதாக இருக்கும்? என்பது குறித்து இந்திய அணியின் சுழல் பந்துவீச்சு ஆல் ரவுண்டர் அக்சர் படேல் பேசியிருக்கிறார்.

இதுகுறித்து அக்சர் படேல் கூறும்பொழுது “நான் சூரியகுமார் உடன் நிறைய நேரம் செலவிட்டு இருக்கிறேன். சூரியகுமார் பாய் எப்பொழுதும் ஒரு மகிழ்ச்சியான நபர். அவர் மிமிக்ரி மற்றும் வேடிக்கையான விஷயங்களை விரும்பக்கூடிய ஒருவர். அவர் அணியின் சூழலை எப்பொழுதும் மிகவும் குளிர்ச்சியாகவும் அருமையாகவும் வைத்திருக்கக் கூடியவர்.

- Advertisement -

சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் தலைமையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடினேன். அவர் பந்துவீச்சாளர்களின் கேப்டனாக இருந்தார். நாங்கள் விரும்பும் படி எங்களுக்கு ஃபீல்டு செட்டப் கொடுத்தார். மேலும் அதில் தற்பொழுது பெரிய மாற்றங்கள் எதுவும் இருக்காது என்று நினைக்கிறேன். அதே சமயத்தில் ஒரு தொடரை வைத்து ஒரு கேப்டனை முடிவு செய்ய முடியாது. நாங்கள் அதிகமாக அவருடன் விளையாடும் பொழுது, அவரது கேப்டன்சியை பற்றி புரிந்து கொள்வோம்.

இதையும் படிங்க : கம்பீர் குறுக்கு வழியில் கோச் ஆகிட்டார்.. ஆனா இவர்தான் வந்திருக்கனும் – பாக் தன்வீர் அஹ்மத் குற்றச்சாட்டு

கம்பீர் பாயுடன் இலங்கைக்கு வந்திருக்கிறோம். இங்கு சில மீட்டிங் நடக்கும். நாங்கள் எங்களுடைய யோசனைகளை மாற்றி பகிர்ந்து கொள்வோம். அதன் பிறகு என்னுடைய பங்கு என்ன? அவர் என்ன நினைக்கிறார்? என்பது குறித்து நான் தெரிந்து கொள்வேன். அதன் பிறகு ஒரு தெளிவு கிடைக்கும்.அதிலிருந்து எல்லாம் ஆரம்பிக்கும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -