7 விக்கெட் 207 ரன்கள்.. மாறி மாறி பதிலடி கொடுக்கும் இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ்.. விறுவிறுப்பான கட்டத்தில் 2வது டெஸ்ட்

0
1645
England

வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக இரண்டாவது போட்டியில் விளையாடுகிறது. இரண்டாவது இன்னிங்ஸை எட்டி இருக்கும் இந்த போட்டி தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது.

இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீசுவதென முடிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு ஒல்லி போப் 121 ரன்கள், பென் டக்கெட் 71 ரன்கள், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 69 ரன்கள் எடுத்தார்கள். அந்த அணி முதல் நாளில் 416 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அல்ஜாரி ஜோசப் மூன்று விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இரண்டாவது நாளில் தனது முதல் இன்னிங்ஸ் துவங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 351 ரன்கள் எடுத்தது. கெவிம் ஹாட்ஜ் 120 ரன்கள் மற்றும் அலிக் ஆதனஸ் 84 ரன்கள் எடுத்தார்கள். இதற்கு அடுத்து இன்று மூன்றாவது நாள் தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 457 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முதல் இன்னிங்சில் மூன்றாம் நாளில் விக்கெட் கீப்பர் ஜோஸ்வா டி சில்வா ஆட்டம் இழக்காமல் 82 ரன்கள் குவித்தார். இங்கிலாந்தின் பந்து வீச்சு தரப்பில் கிறிஸ் வோக்ஸ் நான்கு விக்கெட் கைப்பற்றினார். மேலும் கஸ் அட்கின்சன் மற்றும் சோயப் பஷீர் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள். வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து அணியை விட 41 ரன்கள் முன்னிலை பெற்றது.

- Advertisement -

இதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணிக்கு ஜாக் கிரவுலி துரதிஷ்டவசமாக 4 பந்தில் 3 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இவரைத் தொடர்ந்து விளையாடிய பென் டக்கெட் 92 பந்தில் 76 ரன்கள், ஒல்லி போப் 67 பந்தில் 61 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

இதைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் இருவரும் மேற்கொண்டு விக்கெட் விழாமல் தடுத்து நிறுத்தி, மூன்றாவது விக்கெட்டுக்கு 142 பந்துகளில் 108 ரன்கள் அதிரடியாக பாட்னர்ஷிப் அமைந்தார்கள். ஜோ ரூட் 67 பந்துகளில் 37 ரன்கள், ஹாரி புரூக் 78 பந்துகளில் 71 ரன்கள் எடுத்து களத்தில் நிற்கிறார்கள்.

இதையும் படிங்க : 7 பேர் ஒற்றை இலக்கம்.. ஆனா ஸ்கோர் 177.. அருண் கார்த்திக் அட்டகாசம்.. கடைசியில் நெல்லையை வென்றது திருச்சி.. டிஎன்பிஎல் 2024

தற்பொழுது இங்கிலாந்து அணி மூன்று விக்கெட் இழப்புக்கு இரண்டாவது இன்னிங்ஸில் 248 ரன்கள் எடுத்து மூன்றாம் நாள் முடிவில் 207 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது. இன்னும் இரண்டு நாட்கள் மீதம் இருக்கும் நிலையில், இங்கிலாந்து கைகளில் ஏழு விக்கெட்டுகள் இருக்கிறது. எனவே இங்கிலாந்து பெரிய டார்கெட்டை நிர்ணயிப்பது உறுதி. மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணியும் அதிரடியாக விளையாடிய 457 ரன்கள் முதல் இன்னிங்ஸில் எடுத்தது. எனவே இந்தப் போட்டி தற்பொழுது பரபரப்பான நிலையை எட்டி இருக்கிறது!

- Advertisement -