இந்திய அணிக்கு ராகுல் டிராவிட்டுக்கு பிறகு கவுதம் கம்பீர் புதிய தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்று இருக்கிறார். இந்த மாத இறுதியில் இலங்கை அணிக்கு எதிராக துவங்கும் டி20 தொடரில் இருந்து பயிற்சியாளராக அவர் பணியைத் துவங்குவார். இவர்களில் கம்பீர் இந்திய அணிக்குள் என்ன மாதிரியான மாற்றங்களை கொண்டு வருவார் என்பது குறித்து தினேஷ் கார்த்திக் பேசி இருக்கிறார்.
கம்பீர் பற்றி பொதுவாக எல்லோரும் கூறும்பொழுது அவர் வெற்றிக்காக எதையும் செய்யக் கூடியவராக இருப்பார் என்றும், மிகவும் தீவிரமான நபர் என்றும், மேலும் அருமையான திட்டங்களை சிந்தித்து செயல்படுத்த கூடியவர் என்றும் கூறுகிறார்கள். தினேஷ் கார்த்திக் கம்பீர் பற்றி கூறிய போதிலும் இந்த கருத்துக்களைக் கூறியிருக்கிறார்.
மேலும் தினேஷ் கார்த்திக் கம்பீர் பற்றி பேசும் பொழுது கம்பீர் தன்னுடைய வீரர்களை எப்பொழுதும் பாதுகாக்கக் கூடியவர் என்றும், சர்வதேச மட்டத்தில் விளையாடும் வீரர்கள் எப்பொழுதும் தனியாக விடப்பட்டது போல் உணரக்கூடாது என்றும் கூறியிருக்கிறார்.
கம்பீர் பற்றி பேசி இருக்கும் தினேஷ் கார்த்திக் “நான் ஐபிஎல் தொடரில் ஆரம்ப காலகட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடிய போது சேவாக் கேப்டனாக இருந்தார். பிறகு மூன்று ஆண்டுகளில் கம்பீர் அந்த அணிக்கு கேப்டனாக வந்தார். அவர் சிறந்த கேப்டன். மேலும் அருமையான திட்டங்களை தீட்டுவதில் சாதூரியமானவர். அப்பொழுது நான் அந்த அணியின் துணை கேப்டனாக இருந்தேன்.
கம்பீர் எப்பொழுதும் ஒரு சிறந்த லீடராகவே இருந்திருக்கிறார். நான் உறுதியாகச் சொல்வேன் அவர் இந்திய அணிக்கு இரண்டு விஷயங்களை கட்டாயம் கொண்டு வருவார். அதில் ஒரு விஷயம் என்னவென்றால் அவர் எப்பொழுதும் வீரர்களுக்கான மனிதர். அவர் தனது வீரர்களைப் பாதுகாப்பார். இது சர்வதேச கிரிக்கெட்டில் மிகவும் முக்கியமானது. ஏனென்றால் சர்வதேச கிரிக்கெட்டில் நீங்கள் எப்பொழுதாவது தனிமையாக, வெறுமையாக உணர முடியும்.
இதையும் படிங்க : 351 ரன்.. மாஸ் பார்ட்னர்ஷிப்.. இங்கிலாந்து அணிக்கு பதிலடி கொடுத்த வெஸ்ட் இண்டீஸ்.. கெவிம் ஹாட்ஜ் அசத்தல் சதம்
அடுத்து இரண்டாவதாக இந்திய அணிக்கு நிச்சயம் புதிய திட்டங்களுக்கான கோணங்களை கொண்டு வருவார். அவர் மிகவும் கடுமையான தீவிரமான நபர். அவர் எப்படிப்பட்டவர் என்றால் ‘நான் அணிக்காக விளையாடுவேன் வெற்றிக்காக எதையும் செய்வேன்’ என்பவர்” என்று கூறியிருக்கிறார்.






