நவீன கிரிக்கெட்டில் என்னதான் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தினாலும், பந்துவீச்சாளர்கள் பெறக்கூடிய சலுகைகளை பேட்ஸ்மேன்களால் பெற முடிவதில்லை.
அப்படிப்பட்ட ஒரு சில விஷயங்கள் குறித்து இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் ஆன சுனில் கவாஸ்கர், பேட்ஸ்மேன்களின் துயரம் குறித்து சில முக்கிய கருத்துகளை விவரித்து எழுதி இருக்கிறார்.
சர்வதேச கிரிக்கெட்டை பொருத்தவரை ஒரு குறிப்பிட்ட ஓவருக்கு பிறகு பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சாளர்கள் என இரண்டு அணிகளுக்குமே ஒரு குறிப்பிட்ட நிமிடங்கள் ட்ரிங்க்ஸ் பிரேக் என்பது பொதுவாக வழங்கப்படும். அந்த நேரத்தில் இரண்டு அணி வீரர்களும் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்வதிலும், புத்துணர்ச்சி பெறவும் அந்த நேரங்களை எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் தற்போது குறிப்பிட்ட ட்ரிங்க்ஸ் பிரேக்குக்கு பிறகும் கூடுதலாக பந்துவீச்சாளர்கள் இடைவெளியை எடுத்துக் கொள்கிறார்கள்.
குறிப்பாக பந்து வீச்சாளர்கள் ஒரு ஓவரை முடித்தவுடன், அவருக்கு பதிலாக வேற ஒரு பீல்டரை உள்ளே நிறுத்திவிட்டு, அந்த பந்துவீச்சாளர் வெளியே சென்று குளிர்பானத்தை அருந்திவிட்டு திரும்பவும் மைதானத்திற்கு வருவது நடைமுறையில் அதிகமாக உள்ளது. ஆனால் கிரிக்கெட் விதி ஒரு குறிப்பிட்ட வீரருக்கு விக்கெட் விழும் போதோ அல்லது பௌண்டரி லைனில் இருக்கும் போது விளையாடும் நேரத்தை வீணடிக்காமல் இருக்க வேண்டும். நடுவரின் அனுமதியின்றி எந்த குளிர்பானமும் உள்ளே கொண்டு வரக்கூடாது. மேலும் மைதானத்திற்குள் வரும் வீரர் முறையான உடையை அணிந்திருக்க வேண்டும் என்று கூறுகிறது.
ஆனால் இந்த நடைமுறையில் பேட்ஸ்மேன்கள் பாதிக்கப்படுவதாக சுனில் கவாஸ்கர் குற்றம் சாட்டியிருக்கிறார். இது குறித்து கவாஸ்கர் விரிவாக கூறும்பொழுது “ஆறு பந்துகள் வீசி முடித்த பின்னர் ஒரு பந்துவீச்சாளர் ட்ரிங்க்ஸ் பிரேக் எடுக்கிறார் என்றால், பிறகு எதற்கு கூடுதலாக ட்ரிங்ஸ் பிரேக் என்று ஒன்றை வழங்க வேண்டும். ஆறு பந்துகள் வீசிய பவுலருக்கே ட்ரிங்ஸ் பிரேக் என்றால் ஒரு போட்டியில் எட்டு ரன்கள் அல்லது அதற்கு மேல் இருக்கும் பேட்ஸ்மேன்களுக்கு எந்தவித ட்ரிங்ஸ் பிரேக்கும் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இதனால் பழைய நடைமுறையின் படியே ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை, எதிர் கேப்டனின் அனுமதி பெற்ற பிறகு பானங்கள் மைதானத்திற்குள் எடுத்து வர வேண்டும் என்ற முறையை திரும்ப கொண்டுவர வேண்டும். நடுவர்கள் ஒரு பந்து வீச்சாளர் அதை செய்ய அனுமதித்தவுடன் அதே தற்போது ட்ரெண்டாகி வருகிறது.
இதையும் படிங்க:கம்பீர் அப்பவே இதை தரமாட்டார்.. இப்ப கோச் வேற.. நீங்க போராடனும் – இலங்கை ஏஞ்சலோ மேத்யூஸ் பேட்டி
ஒரு ரிசர்வ் பிளேயர் அவரது சகவீரருக்கு குளிர்பானம் தர உள்ளே வரும்போது மற்ற வீரர்களை பார்த்து கேலி கிண்டல் செய்வதை நடுவர்கள் பார்த்து அது தற்போது குற்றச்சாட்டாக மாறி உள்ளது. எனவே இதை மூன்றாம் நடுவரும் கள நடுவரும் ஒரு ரிசர்வ் பிளேயர் மைதானத்திற்குள் உள்ளே வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவரது சக வீரருக்கு குளிர்பானம் தர வேண்டுமானால் அது பௌண்டரி லைனில் இருந்தே கொடுக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.






