கம்பீர் அப்பவே இதை தரமாட்டார்.. இப்ப கோச் வேற.. நீங்க போராடனும் – இலங்கை ஏஞ்சலோ மேத்யூஸ் பேட்டி

0
1258
Gambhir

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் பொறுப்பை ஏற்க இருக்கிறார். இந்த நிலையில் இலங்கை வீரர்கள் திசாரா பெரேரா மற்றும் ஏஞ்சலோ மேத்யூஸ் கவுதம் கம்பீருக்கு பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

ஐபிஎல் தொடரில் கவுதம் கம்பீர் கேப்டனாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இரண்டு முறை கோப்பையை வென்றிருக்கிறார். மேலும் இந்த ஆண்டு அதே அணிக்கு மென்டராக வந்து கோப்பையை வென்று இருக்கிறார். மேலும் லக்னோ அணிக்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் மென்டராக இருந்து பிளே ஆப் சுற்றுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

- Advertisement -

அவருடைய அதிரடியான சிந்தனைகள் மற்றும் சுயநலமில்லாத ஆட்ட பாணி ஆகியவை இந்திய கிரிக்கெட் வாரியத்தை வெகுவாகக் கவர்ந்த காரணத்தினால், அவரை இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சிளர் பொறுப்புக்கு ராகுல் டிராவிட்டுக்கு அடுத்து கொண்டு வந்திருக்கிறது.

இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்புக்கு கௌதம் கம்பீர் வந்திருப்பது குறித்து பேசிய திசாரா பெரேரா ” 2011 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் நான் அவருக்கு எதிராக விளையாடினேன். மேலும் அந்தப் போட்டியில் நான் அவருடைய விக்கெட்டை கைப்பற்றியும் இருந்தேன். எனவே எனக்கு அது மிகவும் சிறந்த மறக்க முடியாத தருணமாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

சில நேரங்களில் கம்பீர் ஆக்ரோஷமாக இருக்கிறார். அதை நான் டிவியில் பார்த்திருக்கிறேன். ஆனால் அவர் ஒரு நல்ல பயிற்சியாளராக இருக்க வேண்டும் என்றால் கொஞ்சம் ஆக்ரோஷத்துடன் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் வீரர்களைக் கட்டுப்படுத்த முடியும். இல்லையென்றால் முடியாது. அவரை இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிப்பது நல்ல முடிவு” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : மகளிர் ஆசிய கோப்பை.. பாகிஸ்தான் அணிக்கு எதிரா என்னுடைய முக்கிய வேலை இதுதான்.. அதை செய்வேன் – ஹர்மன்பிரித் கவுர் பேட்டி

இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் இதுகுறித்து பேசும் பொழுது “கம்பீர் எப்பொழுதும் ஒரு கடுமையான போட்டியாளர். மிகவும் ஆக்ரோஷமான வீரர். அவர் பேட்டிங் செய்யும்பொழுது கூட உங்களுக்கு கிப்ட் ஆக விக்கெட்டை தர மாட்டார். அவருடைய விக்கெட்டை பெற எப்பொழுதும் போராட வேண்டும். மேலும் களத்தில் அவர் சிறந்த கேரக்டராக இருந்திருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -