இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அடுத்ததாக ஆசிய கோப்பையில் பங்கு பெற உள்ளது. நடப்புச் சாம்பியன் ஆன இந்திய அணியோடு மொத்தமாக எட்டு அணிகள் இந்த ஆசிய கோப்பை தொடரில் பங்கு பெற உள்ளன.
இதில் முக்கிய போட்டியாக கருதப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நடைபெறும் நாள் மற்றும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் விபரம் குறித்த முக்கிய தகவல்கள் வெளிவந்துள்ளன.
ஐசிசியின் பெரிய தொடர்களுக்கு அடுத்ததாக ஆசிய கோப்பை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆசிய கண்டத்தில் வலுவான அணி எது என்பதை தீர்மானிக்கும் தொடராக இது கருதப்படும் வேளையில் மகளிர் கிரிக்கெட்டில் கடந்த ஆண்டு இந்திய அணி சாம்பியன் கோப்பையை கைப்பற்றி அசத்தியது. இலங்கையில் நடைபெறும் இந்த டி20 தொடரில் மொத்தமாக எட்டு அணிகள் பங்கேற்க இருக்கின்றன.
இந்த எட்டு அணிகளும் நான்கு அணிகளாக இரண்டு குழுக்கள் பிரிக்கப்பட்டு அந்த இரண்டு குழுவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். அந்த அரை இறுதியில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா மற்றும் நேபால் அணிகள் இடம்பெற்றுள்ளன. குரூப் பி பிரிவில் தாய்லாந்து, மலேசியா, இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இருக்கின்றன.
இந்தத் தொடரில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக கருதப்படுவது இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத உள்ள போட்டியாகும். இந்த போட்டியானது வருகிற 19 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு இலங்கையில் உள்ள ரங்கரி தம்புல்லா இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இது தவிர இந்திய அணி வருகிற 21ஆம் தேதி யூஏஇ அணியுடனும், வருகிற 23ஆம் தேதி நேபாள் அணியுடனும் மோத உள்ளது. இந்த தொடரானது இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
அது மட்டுமல்லாமல் இணையதளத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் லைவ் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. இந்த இரண்டு பிரிவுகளிலும் முதல் இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும் நிலையில் இரண்டு அரை இறுதிப் போட்டிகளும் வருகிற 26ஆம் தேதி மதியம் 2 மணிக்கு ஒரு போட்டியும், இரவு 7 மணிக்கு மற்றொரு போட்டியும்நடைபெற உள்ளன. இதன் இறுதிப் போட்டி வருகிற 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளது.
இதையும் படிங்க:3 பேருக்கு விதிவிலக்கு.. மற்ற இந்திய வீரர்கள் இதை செய்தே ஆகணும்.. பிசிசிஐ போடவிருக்கும் உத்தரவு.. வெளியான தகவல்
ஆசிய கோப்பையில் விளையாடப் போகும் இந்திய மகளிர் அணி:
இந்தியா – ஹர்மன்பிரீத் கவுர் (C), ரிச்சா கோஷ் (WK), உமா செத்ரி (WK), ஸ்மிருதி மந்தனா (VC), ஷஃபாலி வர்மா, தீப்தி சர்மா, பூஜா வஸ்த்ரகர், அருந்ததி ரெட்டி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரேணுகா தாக்கூர், தயாளன் ஹேமலதா, ஆஷா சோபனா, ராதா யாதவ், ஸ்ரேயங்கா பாட்டீல், சஜனா சஜீவன்






