நானும் சச்சினும் அவர் பக்கத்தில் கூட வர முடியாது.. நான் பார்த்த சிறந்த வீரர்களில் ஒருவர்- லாரா புகழாரம்

0
3115

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் முன்னாள் ஜாம்பவான் வீரரான பிரைன் லாரா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் அவ்வப்போது தனது கருத்துக்கள் அல்லது செய்கைகளின் மூலம் கவனத்தை ஈர்ப்பார்.

அப்படி அவர் எழுதிய ஒரு புத்தகத்தில் 90களில் விளையாடிய ஜாம்பவான் வீரரை குறிப்பிட்டு அவரது திறமைக்கு அருகில் தானும் சச்சின் டெண்டுல்கரும் நெருங்கி வர மாட்டோம் என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

கிரிக்கெட் என்று குறிப்பிட்டால் உலக மக்கள் பெரும்பாலானோர் அறியப்பட்ட வீரர்களில் சச்சின் டெண்டுல்கர், பிரைன் லாரா ஆகியோருக்கு முக்கிய பங்கு உண்டு. கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் தற்போது வரை முதல் இடத்தில் இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் கிரிக்கெட் வரலாற்றில் சதத்திற்கு சதம் அடித்த முதல் வீரர் சச்சின்தான்.

அதேபோல வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட்டை பொறுத்த வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் பிரைன் லாரா பெற்றிருக்கிறார். தற்போதுள்ள நவீன கிரிக்கெட்டில் பல்வேறு வீரர்கள் முயற்சித்தாலும் அவரது சாதனையை இன்னமும் ஒருவரால் கூட நெருங்க முடியவில்லை. அதுமட்டுமல்லாமல் உள்ளூர் கிரிக்கெட்டிலும் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் பிரைன் லாரா இருக்கிறார்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் அவர் எழுதியுள்ள சுயசரிதை புத்தகத்தில் 1990களில் விளையாடிய கார்ல் ஹூப்பரை குறிப்பிட்டு தான் பார்த்த சிறந்த வீரர்களில் ஒருவர் கார்ல் ஹூப்பர் எனவும், அவரது திறமைக்கு அருகில் தானும், சச்சின் டெண்டுல்கரும் நெருங்கி வரமாட்டோம் என்று கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் விரிவாக கூறும்பொழுது “கார்ல் ஹூப்பர் நான் பார்த்த மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக இருந்தார்.

மிகச் சிறந்த திறமையான வீரர்களில் ஒருவர். நானும் சச்சின் டெண்டுல்கரும் கூட அந்த திறமையை நெருங்க மாட்டோம் என்று நினைக்கிறேன். கார்ல் ஹூப்பர் விளையாட ஆரம்பித்ததில் இருந்து கேப்டன் ஆனது வரை அவரது எண்கள் வித்தியாசமானது. ஒரு கேப்டனாக ஹூப்பர் 50க்கு அருகில் நல்ல பேட்டிங் சராசரி வைத்திருந்தார். ஆனால் ஒரு கேப்டனாக மட்டுமே இந்த சராசரி வைத்திருந்தார் என்பது வருத்தம் அளிக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:WCL பைனல் வெற்றி கொண்டாட்டம்.. எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் – ஹர்பஜன் சிங் அறிக்கை

கார்ல் ஹூப்பர் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியில் முக்கிய பங்கு வகித்தார். தனது ஸ்டைலான பேட்டிங் மற்றும் திறமையான ஆப் ஸ்பின் மூலம் நன்கு அறியப்பட்டார். பேட்டிங் மட்டுமல்லாமல் பந்து வீச்சிலும் மிகப்பெரிய பங்களிப்பை செய்தது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு மிகப்பெரிய சொத்தாக மாறியது. கார்ல் ஹூப்பர் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அவரது எதிரிகளிடமிருந்தும் ஒரே மாதிரியான பாராட்டுக்களை பெற்றார்.

- Advertisement -