நேற்று இரவு இந்திய கிரிக்கெட் வாரியம் இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமித்து அறிவித்திருந்தது. பழைய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பொறுப்பில் இருந்து வெளியேறி இருக்கிறார். இந்த நிலையில் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்க இருக்கும் கவுதம் கம்பீர் தனக்கு தேவையான பயிற்சியாளர் குழுவை கேட்டு வருவதாக கூறப்படுகிறது.
விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரி ஜோடி பொறுப்பின் கீழ் இந்திய அணி செயல்பட்ட பொழுது பேட்டிங் பயிற்சியாளராக சஞ்சய் பாங்கர், பந்துவீச்சு பயிற்சியாளராக பரத் அருண், பீல்டிங் பயிற்சியாளராக ஸ்ரீதர் ஆகியோர் இருந்தார்கள்.
இதற்கு அடுத்து ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஜோடி பொறுப்பின் கீழ் இந்திய அணி வந்த பொழுது துணைப் பயிற்சியாளர் குழுவில் பேட்டிங் பயிற்சியாளராக விக்ரம் ரத்தோர் பந்து வீச்சு பயிற்சியாளராக பராஸ் மாம்பரே மற்றும் பீல்டிங் பயிற்சியாளராக திலீப் ஆகியோர் இருந்து வருகிறார்கள்.
ஒரு புதிய தலைமை பயிற்சியாளர் வரும்பொழுது அவர் தனக்கு சரிவரக்கூடிய துணைப் பயிற்சியாளர் குழுவை அமைத்துக் கொள்ளலாம். அதற்கு எப்பொழுதுமே அனுமதி உண்டு. இந்த நிலையில் கவுதம் கம்பீர் தனக்கு சில துணைப் பயிற்சியாளர்களை கேட்டு இருப்பதாக செய்திகள் வருகிறது.
இதில் மிக முக்கியமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்து வரும் அபிஷேக் நாயரை இந்திய அணிக்கும் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் பந்துவீச்சு பயிற்சியாளராக கர்நாடக மற்றும் முன்னாள் இந்திய வீரர் வினய்குமாரை சிபாரிசு செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதே சமயத்தில் பழைய பீல்டிங் பயிற்சியாளர் திலீப் அதே பொறுப்பில் தொடர கம்பீர் விரும்புவதாகவும் தெரிகிறது.
அபிஷேக் நாயர் பல கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார். அவர் எதற்காகவே தனியாக மனநல கலை பயின்றவராக இருக்கிறார். தினேஷ் கார்த்திக் கிரிக்கெட் மற்றும் தனிப்பட்ட வாழ்வில் ஏற்பட்ட பிரச்சினைகளின் பொழுது அவரை தன்னுடைய சிறப்பு பயிற்சியின் மூலம் மீட்டெடுத்தவர் இவர்தான்.
இதையும் படிங்க : ரெண்டே மாசம்தான் டைம்.. கம்பீர் ஹர்திக் பாண்டியாவை வச்சு இத செய்தே ஆகணும் – சுனில் கவாஸ்கர் கோரிக்கை
மேலும் அபிஷேக் நாயர் பல இளம் வீரர்களுக்கு வழிகாட்டியாக இருந்து வருகிறார். இதில் மிக முக்கியமாக ரிங்கு சிங் தற்போது இருக்கிறார். மேலும் ஆரம்ப காலகட்டத்தில் ரோகித் சர்மாவுக்கும் அவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக, 2011ஆம் இந்திய அணியில் தேர்வு செய்யாத பொழுது அதிலிருந்து மீண்டு வருவதற்கு உதவிகள் செய்திருக்கிறார். இதன் காரணமாக அபிஷேக் நாயர் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக வருவது ஏறக்குறைய உறுதியான ஒன்றாக கூறப்படுகிறது.






