உலக சாம்பியன் அவங்க வேலையை காட்டிட்டாங்க.. ஆனா எங்க தோல்விக்கு இதுதான் காரணம் – சிக்கந்தர் ராஸா பேச்சு

0
797

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி முதல் போட்டியில் பெற்ற தோல்விக்கு பதிலடி கொடுத்திருக்கிறது.

ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா தோல்விக்கான முக்கிய காரணம் குறித்து சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் குவித்தது. குறிப்பாக இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா 47 பந்துகளில் 100 ரன்கள் குவித்தார். இதில் ஏழு பௌண்டரிகளும், 8 சிக்ஸர்களும் அடங்கும். பின்னர் ருத்ராஜ் 47 பந்துகளில் 77 ரன்களும் ரிங்கு சிங் 22 பந்துகளில் 48 ரன்களும் குவித்தனர்.

இதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கி விளையாடிய ஜிம்பாப்வே அணி இந்திய அணி பந்துவீச்சாளர்களின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 134 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் பறிகொடுத்தது. ஜிம்பாப்வே அணியில் அதிகபட்சமாக மதிவேர் 43 ரன்கள் குவித்தார். பந்துவீச்சில் சிறப்பாக வீசிய ஆவேஸ்கான் மூன்று ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

- Advertisement -

இந்த நிலையில் நூறு ரன்கள் வித்தியாசத்தில் பெரிய தோல்வியை சந்தித்திருக்கும் ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா தோல்விக்கான காரணம் குறித்து கூறும் பொழுது “உலகச் சாம்பியன்கள் இறுதியாக உலக சாம்பியன்கள் போல விளையாடிவிட்டனர். இந்த போட்டியில் எங்களது பீல்டிங் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. நான்கு கேட்ச் வாய்ப்புகளை தவறவிட்டதுதான் இந்த தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இந்த ஆடுகளத்தில் 200 ரன்கள் குவிக்க முடியும் என்று எதிர்பார்த்தேன்.

இரண்டாவது இன்னிங்ஸில் நாங்கள் பேட்டிங் செய்யும்போது பேட்டிங்க்கு மிகவும் வசதியாக இருக்கும் என்று நினைத்தேன். அவர்களுக்கு 20 ரன்கள் கூடுதலாக கிடைத்துவிட்டது. நாங்கள் பேட்டிங் செய்ய வரும்போது இந்த போட்டி மிகவும் நெருக்கமாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் எங்களது டாப் ஆர்டர் பேட்டிங் சரியாக அமையவில்லை. விளையாட வருவதற்கு முன்பாக எங்கள் அணியினருடன் பேட்டிங் செய்வது குறித்து ஆலோசித்தோம்.

இதையும் படிங்க:பயமா எனக்கா?.. ருதுராஜ் நடுவுல அதை சொன்னார்.. என் பேட்டிங் பிளான் இதுதான் – அபிஷேக் சர்மா பேட்டி

அதிரடியாக விளையாட முயற்சி செய்யும் போது எதுவும் சரியாக அமையாமல் போனது. அனுபவமின்மை காரணமாக பல சிக்கல்களுக்கு உள்ளானோம். இனி வரும் போட்டிகளில் இதனை சரி செய்ய வேண்டியது அவசியம்” என்று கூறி இருக்கிறார். முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு இந்திய அணி தற்போது நூறு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அந்த தோல்விக்கு பழி தீர்த்துள்ளது. இரண்டு அணிகளுமே தலா ஒரு வெற்றி பெற்றிருக்கும் நிலையில் மூன்றாவது போட்டி வருகிறது புதன்கிழமை நடைபெற இருக்கிறது.

- Advertisement -