இந்திய இளம் அணி சுக்மன் கில் தலைமையில் நாளை ஜிம்பாப்வேஅணிக்கு எதிராக, அவர்களது நாட்டில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் போட்டியில் விளையாடுகிறது. இந்த போட்டிக்கு முன்பாக தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஒருவரை முக்கிய பொறுப்புக்கு கொண்டு வந்து ஜிம்பாப்வே அதிரடி காட்டி இருக்கிறது.
இந்தியா ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே நாளை துவங்க இருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் எல்லா போட்டிகளும் ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடக்கின்றன. மேலும் மாலை நான்கு முப்பது மணிக்கு துவங்கும் இந்தப் போட்டிகள், ஜூலை 6, 7, 10, 13, 14ஆம் தேதிகளில் வேகமாக நடைபெற்று முடிவுக்கு வருகின்றன.
நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கான தகுதி சுற்றில் உகாண்டா அணியிடம் தோல்வி அடைந்து ஜிம்பாபே அணி டி20 உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற முடியாமல் பரிதாபமாக வெளியேறியது. இதற்கு விசாரணை விசாரணை நடத்தப்பட்டு தற்பொழுது ஜிம்பாப்வே கிரிக்கெட் நிர்வாகத்தில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய கேப்டனாக சிக்கந்தர் ராஸா கொண்டுவரப்பட்டிருக்கிறார். மேலும் மூத்த அனுபவம் வாய்ந்த ஐந்து முக்கிய வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அணியில் இல்லை. புதிதாக பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த அதிரடி பேட்ஸ்மேன் ஒருவரையும் சேர்த்து இருக்கிறார்கள். தற்பொழுது தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் வென்று சாம்பியன் ஆன இந்திய அணிக்கு எதிராக ஜிம்பாப்வே விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் சார்ல் லாங்கேவெல்ட் புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக ஜிம்பாப்வே அணிக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் ஏற்கனவே இரண்டு முறை தென் ஆப்பிரிக்க அணிக்கும் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்திருக்கிறார். ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : நம்ம பசங்க கொண்டாடினத பாக்கறப்ப.. அந்த 3 பேர் வாழ்க்கை வட்டம்னு காட்டிட்டாங்க – அஸ்வின் நெகிழ்ச்சியான பேச்சு
டி20 உலகக்கோப்பைக்கு தகுதி பெற முடியாத காரணத்தினால் ஜிம்பாப்வே இப்படியான அதிரடி நடவடிக்கையில் இறங்கி இருக்கிறது. மேலும் t20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கும் நிலையில், அந்த நாட்டைச் சேர்ந்த ஒருவரையே பந்துவீச்சு பயிற்சியாளராக கொண்டு வந்து, டி20 உலக சாம்பியன் இந்திய அணிக்கு அதிர்ச்சி கொடுக்க ஜிம்பாப்வே அணி முயற்சி செய்கிறது. இந்த அதிரடி முடிவால் இந்தத் தொடருக்கு திடீரென எதிர்பார்ப்புகள் அதிகரித்திருக்கிறது!






