நானும் ஹர்திக்கை விமர்சனம் செய்தேன்.. அதுக்கு காரணம் இதுதான்.. ஆனா வேற ஞாபகம் எனக்கு வருது – இர்பான் பதான் பேட்டி

0
158
Hardik

நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடர் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியாவின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய தொடராக அமைந்திருக்கிறது. பல பிரச்சினைகளை சந்தித்து உலகக் கோப்பைக்கு சென்ற அவர் கதாநாயகனாக திரும்பி எல்லோரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். இந்த நிலையில் ஹர்திக் பாண்டியாவை தானும் விமர்சனம் செய்ததாக இர்பான் பதான் ஒப்புக்கொண்டு பேசியிருக்கிறார்.

2024 டி20 உலகக்கோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியா 48 ஆவரேஜ் மற்றும் 151 ஸ்ட்ரைக் ரேட்டில் ஃபினிஷர் ஆக 144 ரன்கள் எடுத்தார். மேலும் அவர் 25 ஓவர்கள் பந்து வீசி, ஒரு ஓவருக்கு 7.64 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 11 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். ஒட்டுமொத்த அணியின் தன்னுடைய பங்குக்கு மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியிருக்கிறார்.

- Advertisement -

ஹர்திக் பாண்டியா குறித்து இர்பான் பதான் பேசும்பொழுது “ஹர்திக் பாண்டியாவுக்கு இது ஒரு மிகச் சிறந்த பயணமாக அமைந்திருக்கிறது. தற்போது அவர் எல்லா விமர்சனங்களில் இருந்து மீண்டு வந்திருக்கும் பொழுது, ஐபிஎல் நேரத்தில் நான் அவரை விமர்சனம் செய்தேன் என்பது ஞாபகம் வருகிறது. ஆனால் அந்த நேரத்தில் ஹர்திக் பாண்டியா விளையாட்டில் நிறைய தவறுகளை செய்தார்.

அங்கிருந்து திரும்பி வந்து உலகக் கோப்பையை வெல்வது என்பது பெரிய விஷயம். அவர் சிறந்த கேரக்டரை வெளிப்படுத்தினார். ரோகித் சர்மா மற்றும் பும்ராவுடன் இணைந்து இந்திய அணியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த அவர் வெளிப்படுத்திய செயல்திறன் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக இருக்கிறது.

- Advertisement -

இந்த உலகக்கோப்பை வரையிலான அவரது பயணத்தை பார்க்கும் பொழுது, அது எனது பயணத்தையும் நினைவூட்டுகிறது. 2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக நான் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டேன். பிறகு இந்திய ஏ அணிக்காக ஜிம்பாப்வே மற்றும் கென்யாவில் விளையாடினேன். நான் அப்பொழுது பெரிய சிரமங்களை சந்தித்தேன். உடல் மற்றும் மனரீதியாக கடினமாக இருந்தது.

இதையும் படிங்க : 125 கோடி பரிசுத்தொகை.. இவர் மட்டும் பாவம் இல்லையா?.. சமமா எல்லாருக்கும் பிரிச்சு கொடுங்க – சேவாக் வேண்டுகோள்

அப்பொழுது எம்ஆர்எஃப் ஃபேஸ் பவுண்டேஷன்க்கு சென்று அமைதியாக வேலை செய்தது இப்பொழுதும் நினைவுக்கு வருகிறது. என்னுடைய அந்தப் பயணம் ஹர்திக் பயணம் போலவே இருக்கிறது. ஏனென்றால் அவர் மீதான விமர்சனம் மற்றும் குறள்களை அவர் சிறப்பாக கடந்து சென்றார். இது வாழ்நாள் முழுவதும் நினைவில் கொள்ள வேண்டிய சிறப்பு பயணம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -