இந்திய இளம் அணி சுப்மன் கில் தலைமையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஜூலை 6ஆம் தேதி முதல் விளையாடுகிறது. இந்தத் தொடருக்கு தேர்வு செய்யப்பட்ட 15 பேர் கொண்ட அணியில், திறமை இருந்தும் எட்டு இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க முடியாமல் போயிருக்கிறது. அவர்கள் குறித்து பார்க்கலாம்.
இசான் கிஷான் : ஒழுங்கு நடவடிக்கை காரணமாக இந்திய கிரிக்கெட் அணிகளில் இருந்து நீக்கப்பட்ட இவருக்கு மீண்டும் வாய்ப்பு தரப்படவில்லை. இதற்கு முன்பாக ஆஸ்திரேலிய டி20 தொடரில் மூன்றாவது இடத்தில் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
டி நடராஜன் : வாய்ப்பு கொடுக்கப்படாததில் மிக முக்கியமான வீரராக இந்த தமிழக வீரர் இருக்கிறார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியின் கேப்டன் கம்மின்ஸ்க்கு வலது கையாக பந்துவீச்சு இருந்தார். தற்போது புறக்கணிக்கப்பட்டிருக்கும் காரணம் என்னவென்றே தெரியவில்லை.
சந்தீப் சர்மா : ஐபிஎல் தொடர் வரலாற்றில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா அளவுக்கு தாக்கத்தை உருவாக்கிய ஒருவராக இருக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக ராஜஸ்தான் அணிக்கு வந்து யாரும் எதிர்பார்க்காத வகையில் செயல்படும் இவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை.
ஸ்ரேயாஸ் ஐயர் : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரின் சாம்பியன் கொல்கத்தா அணியின் கேப்டன். இந்திய கிரிக்கெட் நிர்வாகம் இவரை டி20 கிரிக்கெட் வடிவத்திற்கு இனி யோசிக்காது என்று தெரிய வந்திருக்கிறது. ஒரு நாள் வடிவத்தில் வாய்ப்பு கிடைக்கும். பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் நீக்கப்பட வாய்ப்புகள் அதிகம்.
வருண் சக்கரவர்த்தி : மர்ம சுழல் பந்துவீச்சாளரான இவர் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கு 21 விக்கெட் கைப்பற்றி மிக முக்கிய காரணமாக இருந்தார். பந்துவீச்சில் லென்த் மற்றும் வேகத்தில் மாறுதல் செய்து இறுதிக்கட்ட ஓவர்களில் கூட பந்து வீச முடியும் என்று நிரூபித்தார். ஆனால் தொடர்ந்து ரவி பிஸ்னாய் இடம் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் சென்று இருக்கிறது.
மயங்க் யாதவ் : தற்போது இந்தியாவின் அதிவேக பந்துவீச்சாளர் இந்த டெல்லி வீரர்தான். லக்னோனுக்காக விளையாடும் இவர் 157 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி சாதனை படைத்தார். மேலும் பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிக்கு எதிராக தனி வீரராக வெற்றி பெற்று கொடுத்தார். காயம் சரியாகவில்லையா? அல்லது இவரை வேறு வடிவத்தில் பயன்படுத்த இந்திய கிரிகெட் நிர்வாகம் நினைக்கிறதா? என்று தெரியவில்லை.
யாஸ் தயால் : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் 14 போட்டியில் 15 விக்கெட் எடுத்திருந்தார். மேலும் மிக முக்கியமாக இடது கை வேகப்பந்துவீச்சாளராக பந்தை ஸ்விங் செய்ய கூடியவராக இருக்கிறார். ஆனாலும் ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு விளையாடும் இடது கை வேகம் பந்துவீச்சாளர் கலீல் அகமதுவை தேர்ந்தெடுத்து இவரைக் புறக்கணித்திருக்கிறார்கள்.
இதையும் படிங்க : ஆச்சரியப்படும் அளவுக்கு இந்த பையன் உழைச்சிருக்கான்.. ஜிம்பாப்வே சீரிஸ்ல பார்க்க காத்திருக்கேன் – கைப் பேட்டி
ரஜத் பட்டிதார் : இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தின் வெள்ளைப் பந்து வடிவத்திட்டங்களில் இவருக்கு மிக முக்கியமான இடம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இவர் தடுமாறியதால், மேலும் சில இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு இருப்பதால், ஆச்சரியப்படும் விதமாக இவரை ஒதுக்கி இருக்கிறார்கள்.






