IND vs BAN.. நாளை அரையிறுதிக்கு முக்கிய போட்டி.. மழை வாய்ப்பு போட்டி நடக்குமா?.. வானிலை அறிக்கை

0
229
T20iwc2024

ஐசிசி ஒன்பதாவது டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் இரண்டாவது போட்டியில் நாளை பங்களாதேஷ் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இந்த போட்டி ஆன்டிகுவா நார்த் சவுண்ட் விவியன் ரிச்சர்ட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கான வானிலை அறிவிப்பு குறித்து பார்க்கலாம்.

இந்திய அணி சூப்பர் 8 சுற்று முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நாளை பங்களாதேஷ் அணிக்கு எதிராக கணிசமான ரன் ரேட்டில் இந்திய அணி வெற்றி பெற்றால், ஏறக்குறைய அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்து விடும்.

- Advertisement -

அதே சமயத்தில் பங்களாதேஷ் அணி இந்திய நேரப்படி இன்று காலை ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வி அடைந்திருக்கிறது. எனவே நாளை இந்தியனுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் அந்த அணி இருக்கிறது. எனவே இந்த போட்டி மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த உலகக் கோப்பை தொடரில் மழை ஒரு முக்கிய பங்கை கொண்டிருக்கின்ற காரணத்தினால், நாளைய போட்டி குறித்த அச்சம் இருநாட்டு ரசிகர்களுக்குமே இருக்கிறது. ஆனால் இந்த போட்டிக்கு இருநாட்டு ரசிகர்களும் மகிழ்ச்சி அடையும் விதமாக வானிலை அறிக்கை கிடைத்திருக்கிறது.

- Advertisement -

நாளைய போட்டியில் 23 சதவீதம் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் மட்டுமே இருக்கிறது. மேலும் பகல் முழுவதும் நல்ல வெப்பநிலை காணப்படும் என்று கூறப்படுகிறது. எனவே நாளைய போட்டி எந்தவித பாதிப்பும் இல்லாமல் 40 ஓவர்களும் நடைபெறும். எனவே நாளை ஒரு அணி அரை இறுதிக்கு ஏறக்குறைய முன்னேறும், இல்லையென்றால் ஒரு அணி அரை இறுதி வாய்ப்பை தக்கவைக்கும்.

இதையும் படிங்க : சூரியகுமார் பெஸ்ட் டி20 பேட்ஸ்மேன்.. ஆனா இந்த வீரர் கடவுள் தந்த பரிசு.. ஈடே கிடையாது – அம்பதி ராயுடு பேட்டி

மேலும் இந்த குறிப்பிட்ட மைதானம் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. எனவே மழையால் போட்டி பாதிக்கப்படாமல் இருக்கும் என்பதால் ரசிகர்களுக்கு நல்ல கிரிக்கெட் விருந்து காத்திருக்கிறது.

- Advertisement -