கோலிய வைச்சு ரோகித் அந்த ஒரு வேலையை செய்யக்கூடாது.. எல்லாமே அப்செட் ஆயிடும் – லாரா கருத்து

0
77
Lara

இந்திய அணி நேற்று டி20 உலகக்கோப்பை தொடரில் அமெரிக்க அணிக்கு எதிராக வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கிறது. இந்திய அணி தனது கடைசிப் போட்டியில் கனடா அணிக்கு எதிராக அமெரிக்கா ஃபுளோரிடா மைதானத்தில் விளையாடி வெஸ்ட் இண்டீஸ் அடுத்து செல்கிறது. இந்த நிலையில் பிரையன் லாரா ரோஹித் சர்மாவுக்கு முக்கியமான எச்சரிக்கை ஒன்றைச் செய்திருக்கிறார்.

இந்திய அணி இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் அயர்லாந்து பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா என வரிசையாக மூன்று போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கிறது. மூன்று போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி அடைந்தபோதிலும் விராட் கோலி 3 போட்டிகளிலும் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறி இருக்கிறார்.

- Advertisement -

டி20 உலகக்கோப்பைகளில் பெரிய சாதனைகளை கைவசம் வைத்திருக்கும் விராட் கோலி தொடர்ந்து 2 போட்டிகள் இரட்டை இலக்க ரன்னில் வெளியேறியது நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில்தான் என்பது முக்கியமான விஷயம். குறிப்பாக மூன்றாவது போட்டியில் அமெரிக்காவுக்கு எதிராக கோல்டன் டக் ஆனார்.

ஏனென்றால் இதுவரையில் பேட்டிங் வரிசையில் மூன்றாம் இடத்தில் விளையாடி வந்த விராட் கோலி தற்போது துவக்க இடத்தில் விளையாடுகிறார். இதன் காரணமாகத்தான் பெரிய சரிவு அவரது பேட்டிங்கில் உண்டாகி இருப்பதாக பலரும் கூறி வருகிறார்கள். ஆனால் பிரையன் லாரா இதற்கு மாற்றான ஒரு கருத்தை முன் வைத்திருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து பிரையன் லாரா கூறும்பொழுது “நிச்சயமாக இந்தியாவுக்கு துவக்க இடத்தில் இடதுகை வலதுகை காம்பினேஷன் உடன் துவங்க முடியும். ஆனால் ரோகித் மற்றும் விராட் இருவரும் தங்களுடைய ஐபிஎல் அணிகளுக்கு துவக்க இடத்தில் சிறப்பாக விளையாடியவர்கள். மேலும் இந்திய அணிக்கும் அவர்கள் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க : பாபர் நீங்க ஒரு டூப்ளிகேட் கிங்.. மக்களே இந்த புள்ளி விவரங்களை நீங்களே பாருங்க – அகமத் சேஷாத் விமர்சனம்

இந்த நிலையில் நீங்கள் விராட் கோலியை கீழே அனுப்பும் மாற்றங்களை மேலே செய்தால். கீழ் வரிசையில் உருவாக்கி இருக்கும் எல்லா விஷயங்களும் அப்செட் ஆகும். எனவே தொடர்ந்து விராட் கோலி ரோஹித் சர்மா துவக்க ஆட்டக்காரர்களாக வரவேண்டும். இந்திய அணி தொடர்ந்து வெற்றி பெற்ற வருகின்ற காரணத்தினால், அவர்கள் மாற்றங்கள் எதுவும் செய்வார்கள் என்று நான் நம்பவில்லை” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -