கோலியை விட ஆர்சிபி ரசிகர்கள் பெரியவர்கள்.. அவங்கதான் இந்திய அணியில் என்னை சேர்த்தாங்க – தினேஷ் கார்த்திக் பேட்டி

0
75
DK

ஐபிஎல் தொடரில் தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் சீசன் இருந்து நடப்பு ஆண்டு ஐபிஎல் சீசன் வரை மொத்தம் 17 ஆண்டுகளும் தவறவிடாமல் விளையாடி இருக்கிறார். இந்த நிலையில் இந்த ஆண்டு அவர் ஓய்வு பெற்றார். மேலும் அவர் விளையாடி வந்த ஆர்சிபி அணியின் ரசிகர்கள் குறித்து அவர் பேசியிருக்கிறார்.

தினேஷ் கார்த்திக் உடைய ஐபிஎல் கிரிக்கெட் பயணம் டெல்லி அணியில் ஆரம்பித்தது. பின்பு அவருக்கு மத்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் நல்ல ஆண்டு அமைந்தது. அதைத்தொடர்ந்து அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு வாங்கப்பட்டு கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார்.

- Advertisement -

தினேஷ் கார்த்திக் கொல்கத்தா அணிக்கு கேப்டன் பதவியில் சரிவர இயங்க முடியவில்லை. அணிக்குள் அவருக்கும் வீரர்களுக்கும் இடையே சில பிரச்சனைகள் உருவானது. இதன் காரணமாக இயான் மோர்கன் 2021 ஆம் ஆண்டு கேப்டனாக நியமிக்கப்பட்டார். மேலும் 2022 ஆம் ஆண்டு கொல்கத்தா அணி அவரை கழட்டிவிட்டது.

அந்த ஆண்டு நடைபெற்ற மெகா ஏலத்தில் 5.50 கோடி ரூபாய்க்கு ஆர்சிபி அணி அவரை வாங்கியது. 2022 ஆம் ஆண்டு 180 ஸ்டிரைக் ரேட் மற்றும் 300 ரன்கள் பினிஷர் ஆக அடித்து தினேஷ் கார்த்திக் கலக்கினார். அந்த ஆண்டு அவருக்கு மிக அருமையான ஆண்டாக அமைந்து டி20 உலகக் கோப்பை இந்திய அணிகளும் இடம் கிடைத்தது.

- Advertisement -

தற்போது இது குறித்து பேசி இருக்கும் தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது “ஆர்சிபி அணியின் அடிப்படை அந்த அணியின் ரசிகர்கள் என்று நான் நினைக்கிறேன். அந்த அணி குறித்து நினைக்கும் பொழுது அந்த ரசிகர்களை விட பெரிதாக எதுவும் இல்லை. அந்த அணியில் பெரிய பெயராக விராட் கோலி இருக்கலாம் ஆனாலும் அவரை விட பெரியவர்கள் அந்த அணியின் ரசிகர்கள்.

இதையும் படிங்க : டி20 உலககோப்பை.. பாகிஸ்தான் அணியை வெளியிட்டது.. 7 ஸ்பெஷல் வீரர்கள் சிறப்பு.. அதிரடி திட்டம்

அந்த அணியின் ரசிகர்கள் எனக்கு பெரிய அளவில் அன்பை கொடுத்தார்கள். 2022 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் எனக்கு இடம் கிடைத்ததற்கு காரணம் அவர்கள்தான் என்று நான் நினைக்கிறேன். அந்த ஆண்டு நான் இந்திய அணியில் இருக்க வேண்டும் என்கின்ற அலை சமூக வலைதளங்களில் வீசியது. நீண்ட காலமாக இந்திய அணியில் இல்லாத நான் 37 வயதில் மீண்டும் இடம் பெற்றதற்கு, ஆர் சி பி ரசிகர்கள் ஒரு காரணமாக இருந்தார்கள் என்று நான் நினைக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -