இந்திய அணியில் ரிங்கு சிங்.. அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா? வலியிலிருந்து வந்த வார்த்தை

0
3489

இந்திய கிரிக்கெட் அணியில் சுரேஷ் ரெய்னாவுக்கு பிறகு கீழ் வரிசையில் இறங்கி அணிக்கு வெற்றி தேடி தரும் வீரர் யாரையும் நாம் கண்டுபிடிக்கவில்லை. இந்த நிலையில் புதிய சுரேஷ் ரெய்னாவாக ஐபிஎல் தொடரில் கே கே ஆர் அணிக்காக ரிங்கு சிங் கெத்து காட்டி வருகிறார்.

ரிங்கு களத்தில் நின்றால் எதிரணிக்கு கடைசி பந்து வரை வெற்றி நிச்சயம் இல்லை என்ற பெயரை அவர் வாங்கி இருக்கிறார். நடப்பு ஐபிஎல் சீசனில் ஏழு போட்டிகளில் அவர் சேஸிங் செய்திருக்கிறார். இதில் 305 ரன்கள் அடித்திருக்கிறார். சராசரியாக 152 ரன்களும் ஸ்ட்ரைக் ரேட் 174 என்று அளவில் ரிங்கு சிங் வைத்திருக்கிறார்.

- Advertisement -

மேலும் இதில் நான்கு அரை சதமும் அடங்கும். இதேபோன்று சேசிங்கில் 20 பவுண்டரிகளையும் 22 சிக்ஸர்களையும் ரிங்கு சிங் அடித்திருக்கிறார். நேற்று லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் கூட ரிங்கு சிங் கடைசி வரை போராடி தாம் சாம்பியன் வீரர் என்பதை நிரூபித்துள்ளார்.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம்  பேசிய ரிங்கு சிங், தாம் கடைசி இரண்டு ஓவர்களில் அதிரடியாக விளையாடி வெற்றி பெற்று விடலாம் என்று மிகவும் நம்பியதாக கூறினார். தன் மீது நம்பிக்கை இருந்ததால் எந்த பரபரப்பும் பதற்றமும் அடையாமல் களத்தில் நின்றதாக ரிங்கு சிங் குறிப்பிட்டார்.

நடப்பு ஐபிஎல் சீசன் தமக்கு திருப்தியாக இருந்ததாக குறிப்பிட்ட ரிங்கு சிங்,  இந்திய கிரிக்கெட் அணியில் இடம் கிடைப்பது குறித்து கேள்விக்கு அது தமது கைகளில் இல்லை என்றும் பதிலளித்தார். தாம் தொடர்ந்து அணிக்காக விளையாடி வெற்றியை பெற்று தருவேன் என்றும், என் கைகளில் இருக்கும் பயிற்சியை மட்டும் நாம் தீவிரமாக செய்வேன் என்று பதில் அளித்தார்.

- Advertisement -

ரிங்கு சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்.  துப்புரவு பணியாளர்கள் பணி எல்லாம் செய்து இருக்கிறார். இது குறித்து பேசிய ரிங்கு சிங் தான் குஜராத்துக்கு எதிராக 5 சிக்ஸர்கள் அடித்ததில் இருந்து தமக்கு அதிகம் மரியாதை கிடைப்பதாகவும் நடப்பு ஐபிஎல் தொடர் தமது வாழ்க்கையில் பல மாற்றத்தை ஏற்படுத்தி விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அதாவது நமது திறமையை நிரூபித்த பிறகு தான் தாமை அனைவரும் மதிப்பதாக ரிங்குசிங் அளித்த பதில் ரசிகர்களை உருக்கமடைய செய்திருக்கிறது. உலக கோப்பை தொடரிலே இந்திய அணி பயன்படுத்த வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.