எனக்கு எந்த டார்கெட்டும் கிடையாது; அதனால எந்த விரக்தியும் கிடையாது; விராட் கோலி மாஸ் பேச்சு!

0
2336
Viratkohli

இன்று கேரள மாநிலம் திருவனந்தபுர மைதானத்தில் ஒரு நாள் தொடரின் கடைசி மற்றும் மூன்றாவது போட்டியில் இந்தியா இலங்கை அணிகள் மோதியது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி கில் மற்றும் விராட் கோலியின் அதிரடி சதம் மூலம் 50 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 390 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து களம் இறங்கிய இலங்கை அணி படுமோசமாக பேட்டிங் செய்து 73 ரன்களுக்கு சுருண்டு 317 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான உலக சாதனை செய்து தோற்றது.

ஆட்டத்தில் வெற்றிக்குப் பிறகு ஆட்டநாயகன் விருதையும் தொடர் நாயகன் விருதையும் பெற்றுக் கொண்ட விராட் கோலி பேசும் பொழுது ” நான் இந்த ஆட்டத்தில் காட்டிய அணுகுமுறை நான் உருவாக்கிக் கொண்டதாகும். என்னுடைய நோக்கம் அணிக்கு உதவுவதும், அணியை வலுவான நிலையில் வைப்பதும் தான். நான் சரியான காரணங்களுக்காக விளையாடியதால் அது எனக்கு உதவியது. இடைவேளைக்குப் பிறகு திரும்பி வந்த நான் நன்றாக செயல்படுவதாக உணர்கிறேன். எந்த ஒரு மைல் கல்லையும் எட்ட வேண்டும் என்கிற இலக்கு எனக்கு கிடையாது. அதனால் எனக்கு எந்த விரக்தியும் கிடையாது” என்று கூறியுள்ளார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” நான் தற்பொழுது மிகவும் திருப்தியாக இருக்கிறேன் இதையே தொடரவும் நினைக்கிறேன். இந்த இடத்தில் நான் ஒரு நல்ல கிரிக்கெட்டை விளையாடுகிறேன். நான் இப்போது இயல்பாக ஒரு நல்ல இடத்தில் இருக்கிறேன். சமி எப்பொழுதும் எங்களுக்கு புதிய பந்தில் நன்றாக செயல்படுவார். ஆனால் தற்போது சிராஜ் புதிய பந்தில் செயல்படும் விதம் மிகச் சிறப்பாக இருக்கிறது. கடந்த காலத்தில் இது எங்களுக்கு பிரச்சனையாக இருந்தது அதை இப்பொழுது தீர்ந்திருக்கிறது. இது நாங்கள் உலககோப்பைக்கு செல்வதற்கு ஒரு நல்ல அறிகுறி” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -

விராட் கோலி கடந்த ஆண்டு ஆசிய கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக டி20 போட்டியில் சதம் அடித்த பிறகு, இது அவருக்கு நான்காவது சதமாகும். மேலும் கடைசி நான்கு ஒருநாள் போட்டிகளில் அவர் மூன்று சதங்களை விளாசி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது!