நியூசிலாந்து தொடரில் ஹர்திக் பண்டியாவை கேப்டனாக போட்டது, ரோகித் சர்மாவுக்கு கொடுத்த சிக்னல் – கவாஸ்கர் கணிப்பு!

0
7672

நியூசிலாந்து தொடரில் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது ரோகித் சர்மாவிற்கு கொடுக்கும் சிக்னலா? என்பதற்கு பதில் அளித்து இருக்கிறார் சுனில் கவாஸ்கர்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற எட்டாவது டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது. ஆனால் இம்முறையும் இந்திய அணியின் கோப்பைக்கான கனவு நீடிக்கவில்லை.

- Advertisement -

அரை இறுதி சுற்றில் இங்கிலாந்து அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்து உலககோப்பை தொடரிலிருந்து வெளியேறியது. இதனால் இந்திய அணி பல விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

மேலும் இதில் இருந்து சில ஓய்வு முடிவுகள் வெளிவரலாம். இதனால் சில இளம் வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்புகள் கிடைக்கும் என்று நேரடியாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

குறிப்பாக ரோகித் சர்மா டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி மற்ற வீரர்களுக்கு வாய்ப்புகளை கொடுக்க வேண்டும் என்றும் விமர்சனங்கள் வைக்கப்பட்டது பலரின் கவனத்தையும் பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் டி20 உலககோப்பை தொடருக்கு பிறகு, இந்திய அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுகிறது. நவம்பர் 18ஆம் தேதி துவங்கும் இந்த தொடரின் டி20 போட்டிகளுக்கு ஹர்திக் பாண்டியா கேப்டன் ஆக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது ரோகித் சர்மாவிற்கு கொடுக்கும் சிக்னல் என்று விமர்சித்திருக்கிறார் சுனில் கவாஸ்கர்.

“வருகிற நியூசிலாந்து தொடருக்கு ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்திருக்கிறார்கள். ரோகித் சர்மாவிற்கு தேர்வு குழுவினர் கொடுக்கும் தெளிவான சிக்னல் இதுவாகும். இந்திய அணியில் சில முக்கிய வீரர்கள் தங்களது 34, 35 வயதில் இருக்கின்றனர். அதிலிருந்து சிலரின் ஓய்வு முடிவுகள் இனி வெளிவரலாம்.

இளம் வீரர்கள் அணிக்குள் வருவதற்கு தக்க தருணம் இது. இந்தியாவின் எதிர்காலத்தை நோக்கியும் வீரர்கள் சிந்திக்க வேண்டும்.” என்றார்.